திருத்தங்களுக்கு பின் உள்ளாட்சி தேர்தல் நடத்த வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருத்தங்களுக்கு பின் உள்ளாட்சி தேர்தல் நடத்த வலியுறுத்தல்

Added : ஆக 20, 2021
Share
ஈரோடு: திருத்தங்களுக்கு பின், தேர்தலை முழுமையாக நடத்தினால் மட்டுமே சிறந்த பயனை உள்ளாட்சியால் தர முடியும் என, முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி, வேண்டுகோள் விடுத்து மனு அனுப்பியுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின், உள்ளாட்சி துறை அமைச்சராகவும், சென்னை மாநகராட்சி மேயராகவும் இருந்ததால், உள்ளாட்சி

ஈரோடு: திருத்தங்களுக்கு பின், தேர்தலை முழுமையாக நடத்தினால் மட்டுமே சிறந்த பயனை உள்ளாட்சியால் தர முடியும் என, முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி, வேண்டுகோள் விடுத்து மனு அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின், உள்ளாட்சி துறை அமைச்சராகவும், சென்னை மாநகராட்சி மேயராகவும் இருந்ததால், உள்ளாட்சி அமைப்பின் அவசியம் தெரியும். உள்ளாட்சி தேர்தலை நடத்தும் முன், உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அனைத்து உள்ளாட்சிகளுக்கும், ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும். அரசியல் கட்சிகள் தலையீடு, குறுக்கீடு, சின்னம் ஒதுக்கீடு இன்றி, சிற்றூராட்சிகள் வார்டு உறுப்பினர் பொறுப்பு முதல், மாநகராட்சி மேயர் பதவி வரை, சுயேச்சை சின்னங்களை கொண்டே தேர்தல் நடத்த வேண்டும். உள்ளாட்சி வார்டு வரையறை மற்றும் உருவாக்கம் மாற்றி அமைக்கப்பட வேண்டியது அவசியம். இதுபோன்ற திருத்தங்களுக்கு பின்னரே, உள்ளாட்சி தேர்தலை ஒட்டு மொத்தமாக நடத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X