நில மோசடி வழக்கில் கைதான முன்னாள் டி.ஜி.பி., விடுதலை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சண்டிகர்:பஞ்சாபில், நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் டி.ஜி.பி., சுமேத் சிங் சைனி, உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விடுவிக்கப்பட்டார்.உத்தரவு மீறல்பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2012 முதல் 2015 வரை, போலீஸ் டி.ஜி.பி.,யாக பணியாற்றிய சுமேத் சிங் சைனி மீது போலி ஆவணங்களை வைத்து நிலம் வாங்கியதாக

சண்டிகர்:பஞ்சாபில், நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் டி.ஜி.பி., சுமேத் சிங் சைனி, உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விடுவிக்கப்பட்டார்.


உத்தரவு மீறல்


பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2012 முதல் 2015 வரை, போலீஸ் டி.ஜி.பி.,யாக பணியாற்றிய சுமேத் சிங் சைனி மீது போலி ஆவணங்களை வைத்து நிலம் வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.இதையடுத்து கடந்த செப்டம்பரில், அவர் மீது மாநில ஊழல் தடுப்பு மற்றும் விஜிலன்ஸ் இயக்குனரக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த அக்டோபர் மாதம், இந்த வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், 'இந்த வழக்கில் சைனிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், ஏழு நாட்களுக்கு முன், அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப வேண்டும்' என, உத்தரவிட்டது. பின் கடந்த 12ம் தேதி, சைனிக்கு முன்ஜாமின் வழங்கியும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி, மொஹாலியில் உள்ள விஜிலன்ஸ் இயக்குனரகத்தில், விசாரணைக்கு சைனி ஆஜரானார். அப்போது, உயர் நீதிமன்ற ஜாமின் உத்தரவை மீறி அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.பின், நேற்று முன்தினம் பிற்பகல் 2:00 மணிக்கு, மொஹாலி நீதிமன்றத்தில் சைனி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் அனுமதி கோரினர்.


சட்ட விரோதம்

இதற்கிடையே, தன்னை கைது செய்ததற்கு எதிராக, சைனி தாக்கல் செய்த மனுவையும் உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் விசாரித்தது. அப்போது உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:சைனிக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க, ஏழு நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை மீறி, சைனி கைது செய்யப்பட்டுள்ளார்; இது சட்ட விரோதமாகும். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நள்ளிரவில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, நேற்று அதிகாலை 2:00 மணிக்கு சைனி விடுவிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X