பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., மீது தி.மு.க., பொய் வழக்கு போடுவது பற்றி தெரியாது:துரைமுருகன்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
வேலூர்: ''அ.தி.மு.க.,வினர் மீது, தி.மு.க., பொய் வழக்கு போடுவது பற்றி எனக்கு தெரியாது,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.வேலூர் அண்ணா சாலையில் உள்ள, எம்.எல்.ஏ., அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. வேலூர் எம்.எல்.ஏ., கார்த்திகேயன் தலைமை வகித்தார். நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர், நிருபர்களின் கேள்விக்கு

வேலூர்: ''அ.தி.மு.க.,வினர் மீது, தி.மு.க., பொய் வழக்கு போடுவது பற்றி எனக்கு தெரியாது,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.


வேலூர் அண்ணா சாலையில் உள்ள, எம்.எல்.ஏ., அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. வேலூர் எம்.எல்.ஏ., கார்த்திகேயன் தலைமை வகித்தார். நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர், நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த விபரம்:


கேள்வி: அ.தி.மு.க.,வினர் மீது, தி.மு.க., பொய் வழக்கு போடுவதாகவும், இதனால் கவர்னரை சந்தித்து முறையிட்டிருக்கிறார்களே?


பதில்: அதை பற்றி எல்லாம் எனக்கு தெரியாது.


கேள்வி: தி.மு.க., அரசு எல்லா துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது என, முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளாரே?


பதில்: அவர்கள் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டார்கள். அதனால் தான் எங்களை தோல்வியடைந்ததாக கூறுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X