பொது செய்தி

இந்தியா

'சைகோவ் - டி' தடுப்பூசிக்கு டி.சி.ஜி.ஐ., ஒப்புதல்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
புதுடில்லி:'சைடஸ் கேடிலா' நிறுவனம் தயாரித்துள்ள, 'சைகோவ் - டி' தடுப்பூசியை, நம் நாட்டில் அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது.நம் நாட்டில், கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.இதற்கிடையே, 12 வயதுக்கு மேற்பட்டோருக்காக, சைகோவ் - டி என்ற

புதுடில்லி:'சைடஸ் கேடிலா' நிறுவனம் தயாரித்துள்ள, 'சைகோவ் - டி' தடுப்பூசியை, நம் நாட்டில் அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது.

நம் நாட்டில், கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.இதற்கிடையே, 12 வயதுக்கு மேற்பட்டோருக்காக, சைகோவ் - டி என்ற தடுப்பூசியை, குஜராத்தின் ஆமதாபாதை சேர்ந்த சைடஸ் கேடிலா என்றநிறுவனம் தயாரித்துள்ளது. மூன்று, 'டோஸ்'களாக செலுத்தப்படவேண்டிய இந்த தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகளை, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம், சைடஸ் கேடிலா நிறுவனம் சமர்ப்பித்தது.

அதை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி கடந்த மாதம் விண்ணப்பித்து இருந்தது.இந்நிலையில், அதன் கோரிக்கையை ஏற்று, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, சைகோவ் - டி தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு நேற்று ஒப்புதல் அளித்தது.உலகிலேயே, கொரோனா வைரசுக்கு எதிராக தயாரிக்கப்பட்டு உள்ள முதல், டி.என்.ஏ., தடுப்பூசி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X