நள்ளிரவில் வீட்டில் குழந்தை பெற்றெடுத்த இளம் பெண் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நள்ளிரவில் வீட்டில் குழந்தை பெற்றெடுத்த இளம் பெண் '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பு

Added : ஆக 20, 2021
Share
ஆத்தூர்: பிரசவ வலியில் துடித்த இளம் பெண், நள்ளிரவில் வீட்டில் குழந்தை பெற்றெடுத்தார். அவரை, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டுச் சென்று, மருத்துவமனையில் சேர்த்தனர்.சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கல்வராயன்மலை, கீழ்நாடு ஊராட்சி, கிராங்காடு கிராமத்தை சேர்ந்த, விவசாயி மணிவேல், 28. இவரது மனைவி தீபா, 21, மூன்று வயதில் குழந்தை உள்ளது.மீண்டும் கர்ப்பமான தீபாவுக்கு, பிரசவ
 நள்ளிரவில் வீட்டில் குழந்தை பெற்றெடுத்த இளம் பெண் '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பு

ஆத்தூர்: பிரசவ வலியில் துடித்த இளம் பெண், நள்ளிரவில் வீட்டில் குழந்தை பெற்றெடுத்தார். அவரை, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டுச் சென்று, மருத்துவமனையில் சேர்த்தனர்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கல்வராயன்மலை, கீழ்நாடு ஊராட்சி, கிராங்காடு கிராமத்தை சேர்ந்த, விவசாயி மணிவேல், 28. இவரது மனைவி தீபா, 21, மூன்று வயதில் குழந்தை உள்ளது.

மீண்டும் கர்ப்பமான தீபாவுக்கு, பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. கிராங்காடு கிராமத்தில் இருந்து, கருமந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, 30 கி.மீ., செல்ல வேண்டும் என்பதால், 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவித்தனர்.அடியனுார் முதல் கிராங்காடு வரை, ஐந்து கி.மீ., சாலை, வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு உள்ளதால், அடியனுார் பகுதிக்கு வந்து விடும்படி, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறினர். ஆனால், நீண்ட நேரமாகியும் வராததால், கரடு, முரடான சாலையில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்றனர்.
இரவு, 12:40 மணியளவில், தீபாவுக்கு வீட்டிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. தீபா மற்றும் பிறந்த குழந்தைக்கும், ஆம்புலன்சில் வந்த அவசரகால மருத்துவ நுட்புனர் அறிவு மற்றும் டிரைவர் தங்கையா ஆகியோர், மருத்துவ அலுவலர் ஆலோசனையுடன் முதலுதவி மருத்துவ பணிகள் மேற்கொண்டார்.

பின், நலமாக இருந்த தாய், சேய் ஆகியோரை, ஆம்புலன்சில் பாதுகாப்பாக மீட்டுச் சென்று, இரவு, 2:00 மணியளவில், கருமந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். நள்ளிரவிலும், குழந்தை பெற்றெடுத்த தாய், சேயை பாதுகாப்பாக மீட்டு வந்த, ஆம்புலன்ஸ் ஊழியர்களை, மலைவாழ் மக்கள் பாராட்டினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X