பாக்., அரசு தாலிபான்களுடன் சுமூக உறவு? அமைச்சர் பதில்

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் இந்தியா உட்பட உலகின் பல நாடுகள், ஆப்கானிஸ்தானில் குடியிருக்கும் தங்களது குடிமக்களை மீண்டும் தங்கள் நாட்டுக்கு அழைத்து கொண்டுள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தான் தாலிபான் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனை தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டின் பாகிஸ்தான் தூதர்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் இந்தியா உட்பட உலகின் பல நாடுகள், ஆப்கானிஸ்தானில் குடியிருக்கும் தங்களது குடிமக்களை மீண்டும் தங்கள் நாட்டுக்கு அழைத்து கொண்டுள்ளன.



latest tamil news



இந்நிலையில் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தான் தாலிபான் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனை தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டின் பாகிஸ்தான் தூதர் மன்சூர் அகமது கான் உறுதி செய்துள்ளார்.

மேலும் தாலிபான்களுடன் அணுக்கமாகச் செல்ல இம்ரான் கான் அரசு விரும்புவதாக அவர் கூறியுள்ளார். இதனை நியூஸ் இன்டர்நேஷனல் ஊடகம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

அப்துல்லா அப்துல்லா உள்ளிட்ட ஆப்கானிஸ்தான் முக்கியஸ்தர்கள் உடன் பாகிஸ்தான் அரசு இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவித்தார். முல்லா பராதார் மற்றும் தாலிபானின் முக்கிய அதிகாரிகள் பலர் பாகிஸ்தானுடன் கத்தாரில் உயர்மட்டக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இம்ரான் கான் தாலிபான் உடனான பாகிஸ்தானின் உறவு குறித்து தொடர்ந்து கருத்தேதும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார். மேலும் தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களை இதுகுறித்து கருத்து வெளியிடக்கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார்.

தாலிபான் உடனான உறவு குறித்து தனது அமைச்சர்கள் அனைவரும் கருத்து தெரிவிக்க வேண்டியதில்லை குறிப்பிட்ட சிலர் மட்டும் கருத்து கூறினால் போதுமானது என்று முன்னதாக இம்ரான் தெரிவித்திருந்தார்.


latest tamil news



மேலும் ஆப்கானிஸ்தானில் குடிமக்களின் உயிர் மற்றும் உடையவர்களுக்கு ஆபத்து ஏற்படாவண்ணம் சுமுகமாக ஆட்சி கைமாறியதற்கு இம்ரான் கான் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இதன்மூலமாக தாலிபான் பயங்கரவாத அமைப்பின் ஆட்சியை மறைமுகமாக இம்ரான் கான் ஆதரிப்பதாக இணையத்தில் விவாதிக்கப்படுவது குறிப்பிடத் தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஆக-202119:28:53 IST Report Abuse
Vittal anand rao. இவான் காஷ்மீருக்கு தலிபானை வரவழைத்து நமக்கு எதிராக போர் செய்யய் வைத்து காஷ்மீரை பிடுங்க வழி பாக்குறான்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
21-ஆக-202120:44:27 IST Report Abuse
 Muruga Velஅப்படி நடக்க வாய்ப்பில்லை...
Rate this:
Cancel
தமிழன் - Madurai,இந்தியா
21-ஆக-202107:59:41 IST Report Abuse
தமிழன் ஆப்கான் தீவிரவாதியால நாடு அடிவாங்கிரக்கூடாது. ஷரியாத் சட்டத்த காப்பாத்தனும். சோத்துக்கு வேற நாட்ட தான் சார்ந்திருக்கனும். பக்கத்து நாடு இந்தியாவ பாத்தா வயிறெரியுது. இப்படி பல பிரச்னை நமக்கு. இம்ரான்கானோட கஷ்டம் யாருக்கு புரியுது.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
21-ஆக-202106:44:17 IST Report Abuse
 Muruga Vel எப்பியும் துப்பாக்கியோடு அலையறாங்க ..உச்சா போறது கூட கஷ்டமா இருக்குமே ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X