பொது செய்தி

இந்தியா

பழமையை பறைசாற்றும் அரசு அருங்காட்சியகத்துக்கு 156 வயது

Added : ஆக 20, 2021
Share
Advertisement
பெங்களூரு:தென்னிந்தியாவின் இரண்டாவது பழமையான கர்நாடகாவின் அரசு அருங்காட்சியகத்துக்கு, தனது 156 வயதை அடைந்து பழமையின் அடையாளமாய் பிரதிபலிக்கிறது. கர்நாடகாவின் முதல் பழமையான அருங்காட்சியகமும் இதுவாகவே உள்ளது. காட்சியம் துவக்கப்பட்டு, கடந்த 18 ல், 156 ஆண்டுகளை நிறைவு செய்த பெருமையுடன் காட்சியளிக்கிறது.1865, ஆகஸ்ட் 18ம் தேதியில் பெங்களூரு - மைசூரு சாலையில் உள்ள, மாநில அரசின்

பெங்களூரு:தென்னிந்தியாவின் இரண்டாவது பழமையான கர்நாடகாவின் அரசு அருங்காட்சியகத்துக்கு, தனது 156 வயதை அடைந்து பழமையின் அடையாளமாய் பிரதிபலிக்கிறது.

கர்நாடகாவின் முதல் பழமையான அருங்காட்சியகமும் இதுவாகவே உள்ளது. காட்சியம் துவக்கப்பட்டு, கடந்த 18 ல், 156 ஆண்டுகளை நிறைவு செய்த பெருமையுடன் காட்சியளிக்கிறது.1865, ஆகஸ்ட் 18ம் தேதியில் பெங்களூரு - மைசூரு சாலையில் உள்ள, மாநில அரசின் அருங்காட்சியகம் துவக்கப்பட்டது. முதலில் 'மைசூரு அருங்காட்சியகம்' என அழைக்கப்பட்டது. பின், 1877 ல் தற்போதுள்ள பெங்களூரு கஸ்துார்பா சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அருங்காட்சிய நிர்வாகிகள் கூறியதாவது:அருங்காட்சியகம் துவங்கி, முதலாண்டில், சராசரியாக, 80ஆயிரம் பார்வையாளர்கள் வந்து, கலைப்பொருட்களை பார்வையிட்டுள்ளதாக பதிவு உள்ளது. மைசூரு மாவட்ட நிர்வாக பதிவின்படி, பலவிதமான பட்டு, உல்லன் போன்ற ஆடை ரகங்கள், எண்ணெய் வகைகள், பழைய நாணயங்கள், தானியங்கள் போன்றவை தான் முதலில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

மேலும், காட்சிப்படுத்தப்பட்ட பொருட்கள், அப்போது பெங்களூரில் வாழ்ந்த பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் வழங்கியது. பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி வழங்கப் பட்டது. 19வது நுாற்றாண்டின் பழம்பெரும் அருங்காட்சியமாக இருந்தது. முதலில் மைசூரு ரோட்டில் துவங்கப்பட்ட அருங்காட்சியகத்தில் அரிய விலங்குகளின் மேலோடுகள் தான் அதிகமாக பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.முதலில் இந்த காட்சியகம் 'தமாஷா பங்களா' என்றே அழைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X