பொது செய்தி

இந்தியா

பண்டிகைகளால் காற்றில் பறக்கும் விதிமுறைகள்: கண்டிப்பு காட்ட மாநகராட்சி நிர்வாகம் திட்டம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
பெங்களூரு:பண்டிகைகள் நெருங்கி கொண்டிருப்பதால், கொரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.பெங்களூரில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மக்கள் அலட்சியமாக வீதிகளில் உலா வர துவங்கியுள்ளனர். தசரா, உட்பட சில பண்டிகைகள் நெருங்கிக்கொண்டிருப்பதால், வணிக வீதிகளில் மக்கள் கூட்டமாக செல்வதும் அதிகரித்து வருகிறது.இதனால், கொரோனா

பெங்களூரு:பண்டிகைகள் நெருங்கி கொண்டிருப்பதால், கொரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

பெங்களூரில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மக்கள் அலட்சியமாக வீதிகளில் உலா வர துவங்கியுள்ளனர். தசரா, உட்பட சில பண்டிகைகள் நெருங்கிக்கொண்டிருப்பதால், வணிக வீதிகளில் மக்கள் கூட்டமாக செல்வதும் அதிகரித்து வருகிறது.இதனால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை 100 சதவீதம் பின்பற்றுவதை உறுதி செய்வது, மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஒரு சவாலாகவே உள்ளது.

மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா கூறியதாவது:மார்ஷல்கள், பாதுகாப்பு படையினர், ஊர்காவல் படையினர் என குழுவாக பிரிக்கப்பட்டு, கூட்டம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.பண்டிகைகளை கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால், சமூக விலகல் பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது போன்ற நடவடிக்கைகளை அலட்சியப்படுத்தக்கூடாது.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.வணிக நிறுவனங்கள், வியாபாரிகளும் பங்கேற்று, அவர்களுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முக கவசம் அணியாதவர்களிடம், வியாபாரிகள் மற்றும் மக்கள் என யாராக இருந்தாலும் அபராதம் வசூலிக்கப்படும். வணிக நிறுவனங்கள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் விதிமுறைகளை பின்பற்றுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X