பருவமழை குறைவால் விளைநிலங்கள் பாதிப்பு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
பெங்களூரு:கர்நாடகாவில் இம்மாதம் எதிர்பார்ப்பை விட பருவமழை குறைந்துள்ளதால் பெரும்பான்மையான விளைநிலங்கள் வறட்சியில் வாடுகின்றன.கர்நாடகாவின் பல மாவட்டங்கள் இம்மாதம் குறைவான மழைபொழிவால் வறண்ட நிலையில் உள்ளன.கடந்த இரண்டு மாதங்களின் அதிகமான மழைபொழிவும், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக உள்ளது. மாநிலத்தில் 86 தாலுக்காக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக

பெங்களூரு:கர்நாடகாவில் இம்மாதம் எதிர்பார்ப்பை விட பருவமழை குறைந்துள்ளதால் பெரும்பான்மையான விளைநிலங்கள் வறட்சியில் வாடுகின்றன.

கர்நாடகாவின் பல மாவட்டங்கள் இம்மாதம் குறைவான மழைபொழிவால் வறண்ட நிலையில் உள்ளன.கடந்த இரண்டு மாதங்களின் அதிகமான மழைபொழிவும், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக உள்ளது. மாநிலத்தில் 86 தாலுக்காக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.ஜூன், ஜூலையில் இந்த பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ஆகஸ்ட் நிலவரபடி, சராசரியாக 47 சதவீதம் மழை பொழிவு குறைந்துள்ளது.

இம்மாதம் 1 முதல் 18 வரை 144 மி.மீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 77 மி.மீ., தான் பதிவாகியுள்ளது.வானியல் நிபுணர்கள் கூறியதாவது:கர்நாடகாவின் வடக்கு மண்டலப் பகுதிகளில் கிராமங்களில் 51 சதவீதமும்; கடற்கரை பகுதிகளில் 49 சதவீதமும் சராசரியை விட குறைந்த மழையும் பதிவாகியுள்ளது.தெற்கு கர்நாடகாவில் 25 சதவீதம் குறைந்துள்ளது. விளைநிலங்கள் முழுதும் பதப்படுத்தப்பட்டு, நாற்று நடப்பட்டுள்ளன.

இந்த நேரத்தில் விளைநிலங்களுக்கு பருவமழையின் உதவியும் கட்டாயம் தேவை. இந்த வறட்சி நிலை ஒரு வாரத்துக்கும் மேல் நீடித்தால் பயிர்கள் பாதிக்கப்படும்.இவ்வாறு கூறினார்.

பெங்களூரு வானிலை ஆய்வு மைய இயக்குனர் பட்டீல் கூறியதாவது:தற்போதைய வானிலை சூழல் சாதகமாக இல்லை. ஆனால் கடற்கரை ஓரத்தில் உள்ள தாழ்வு மண்டல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:வழக்கமாக, இந்த மாதங்களில் வடக்கு மண்டலத்தில் 78 சதவீதமும்; தெற்கு கர்நாடகாவில் 37 சதவீதமும் மழைப்பொழிவு இருக்கும். அதிகமான மழையால், 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் மொத்த மழை பாதிப்பு 8 சதவீதம் தான். அணைகள் நிறைந்திருப்பதால், விளைநிலங்களில் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X