பொது செய்தி

இந்தியா

நரேகா திட்டத்தில் அதிகரிக்கும் பெண்கள்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
பெங்களூரு:கொரோனா பாதிப்பால், நரேகா திட்டத்தில் பங்கேற்கும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.மத்திய மற்றும் மாநில அரசின் சார்பில், 'நரேகா' எனும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.கொரோனா பாதிப்பு, இரண்டாண்டுகளாக மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. வேலை இழந்தும், ஒரு நாளை கடத்துவதற்கு கூட வழியில்லாமலும் மக்கள்

பெங்களூரு:கொரோனா பாதிப்பால், நரேகா திட்டத்தில் பங்கேற்கும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசின் சார்பில், 'நரேகா' எனும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.கொரோனா பாதிப்பு, இரண்டாண்டுகளாக மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. வேலை இழந்தும், ஒரு நாளை கடத்துவதற்கு கூட வழியில்லாமலும் மக்கள் தவித்தனர்.இந்நிலையால், நரேகா திட்டதில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்துள்ளது.

இத்திட்டத்தில் இரண்டாண்டுகளாக மக்களிடம் ஆர்வம் குறைந்திருந்தது. இதனால் அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஏரிகளை துாய்மைப்படுத்துவது; தடுப்புகள் அமைப்பது போன்ற பணிகளும் பாதிக்கப்பட்டது. நடப்பாண்டில் நிலை மாறியுள்ளது.நரேகா திட்ட தகவல் அறிக்கை படி, 8.2 கோடி பேர், கடந்த ஐந்து மாதங்களில் பதிவு செய்துள்ளனர். இதில் 49.9 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர்.

கொரோனாவுக்கு முன்பு, பெண்கள் வேலை உறுதி திட்டத்தில் இருந்தாலும் அவற்றை பகுதி நேர பணியாக மட்டுமே மேற்கொண்டனர். இப்போது, ஒன்பது மணி நேர பணியாக முழு ஈடுபாட்டுடன் செய்கின்றனர்.

ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட வேலையிழப்பால், பலரும் தங்களின் வாழ்வாதாரத்தின் மீது பயப்படுகின்றனர். தங்களின் குடும்பத்தை காப்பாற்ற பெண்கள் பலரும் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட மாநில கமிஷனர் அனிருத் கூறியதாவது: வேலை இழப்பால், பல பெண்கள், இத்திட்டத்தில் இணைந்திருந்தாலும், மாநில அரசு பெண்களுக்கான வேலை வாய்ப்பு அளிப்பதில் தொடர்ந்து ஊக்குவிப்பதும் ஒரு காரணம் தான். மகளிர் குழுக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாண்டியா மாவட்டத்தில்தான் அதிகமான பெண்கள், பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பெண்களின் பங்கு 50 சதவீதமாக உயர்ந்திருப்பினும், மற்ற மாநிலங்களில், 70 சதவீதத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து திட்டத்தில் பதிவு செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X