பொது செய்தி

இந்தியா

மாணவர்களுக்கு உளவியல் வகுப்பு நிபுணர்கள் ஆலோசனை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
பெங்களூரு:கர்நாடகாவில் பள்ளிகளை திறந்தவுடன், மாணவர்களுக்கு புத்தக பாடங்களை எடுப்பதற்கு முன்பு, உளவியல் ஆலோசனை வழங்க வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர்.கர்நாடகாவில் பள்ளிகளை திறப்பதற்கு மாநில அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 23 முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பி.யூ.சி.,வரை அனைவருக்கும் சுழற்சி முறையில் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது.வகுப்புகள் துவங்கியதும், மாணவர்களை

பெங்களூரு:கர்நாடகாவில் பள்ளிகளை திறந்தவுடன், மாணவர்களுக்கு புத்தக பாடங்களை எடுப்பதற்கு முன்பு, உளவியல் ஆலோசனை வழங்க வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர்.

கர்நாடகாவில் பள்ளிகளை திறப்பதற்கு மாநில அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 23 முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பி.யூ.சி.,வரை அனைவருக்கும் சுழற்சி முறையில் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது.வகுப்புகள் துவங்கியதும், மாணவர்களை மனதளவில் தயார்படுத்த உளவியல் ஆலோசனை தேவை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உளவியல் நிபுணர்கள் கூறியதாவது:மாணவர்கள் பல நாட்களாக வீட்டிலிருந்துதான் பாடம் படித்துக்கொண்டிருக்கின்றனர். கடந்தாண்டிலும் உயர்நிலை வகுப்புகள் தான் முதலில் துவங்கப்பட்டன.இதனால் பத்தாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு தற்போது வகுப்புகள் துவங்குவது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கடந்தாண்டு முழுவதும் வீட்டிலிருந்துதான் படித்துள்ளனர்.

வகுப்பறையில் மீண்டும் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை பின்பற்றுவதற்கு அவர்களுக்கு அவகாசம் தேவைப்படும். அனைத்து மாணவர்களுக்குமே உளவியல் ஆலோசனை தேவை தான். வகுப்புகள் செயல்பட துவங்கியும், பாடத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு நடத்தாமல் ஒரு வாரத்துக்கு மாணவர்களின் மனநிலையை பள்ளி சூழலுக்கு மாற்ற வேண்டும். பள்ளிகள் துவங்கியதும் பாடம் நடத்தினால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுவார்கள்.இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X