பொது செய்தி

இந்தியா

குழந்தைகளை பராமரிக்க சிகிச்சை மையம் தயார்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
பெங்களூரு:கொரோனா மூன்றாம் அலையின் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்பாடு செய்துள்ளது.பெங்களூரின் தெற்கு மண்டல பகுதியான, பத்மநாபநகரில் உள்ள மண்டல கூட்டுறவு மேலாண்மை நிறுவன கட்டடத்தில், 'குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மைய'த்தை மாநகராட்சி நிர்வாகம் சில தன்னார்வல அமைப்புகளின்

பெங்களூரு:கொரோனா மூன்றாம் அலையின் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்பாடு செய்துள்ளது.

பெங்களூரின் தெற்கு மண்டல பகுதியான, பத்மநாபநகரில் உள்ள மண்டல கூட்டுறவு மேலாண்மை நிறுவன கட்டடத்தில், 'குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மைய'த்தை மாநகராட்சி நிர்வாகம் சில தன்னார்வல அமைப்புகளின் உதவியுடன் ஏற்பாடு செய்துள்ளது. சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணிகள் ஒரு மாதத்திற்கு முன்பே, மாநகராட்சி நிர்வாகம் துவங்கியது. தற்போது, நுாறு சதவீதம் பணிகள் நிறைவடைந்து, மையம் தயார் நிலையில் உள்ளது.

மாநகராட்சி கொரோனா தடுப்பு பணிகள் பொறுப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது: குழந்தைகளை சிகிச்சை மையங்களில் வைத்து பராமரிப்பது எளிமையான காரியமல்ல. இதனால் அவர்களை, அங்கு தங்க வைக்கும் அளவுக்கு சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிகிச்சை மையத்தில், குழந்தைகள் விளையாடுவதற்கான தளம் அமைக்கப்பட்டுள்ளது. சுவர்கள் முழுவதும், 'கார்ட்டூன்' பொம்மைகளின் படங்கள் வரையப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு சிறு புத்தகங்கள் வழங்கப்படும். அவர்களுக்கு சிறிய கைவினை பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது.மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர் என்ற அழுத்தத்தை அளிக்காமல், பாதுகாப்பாக பராமரித்து, நோயில் இருந்து விடுபட செய்வது தான் சிகிச்சை மையங்களின் நோக்கமாக உள்ளது.ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு விதமான படங்கள் வரையப்பட்டுள்ளன. விலங்குகள், நட்சத்திரங்கள் என குழந்தைகளை ஆச்சர்யப்படுத்தும் படங்களாக அமைந்துள்ளன.

இந்த மையத்தில், மொத்தமாக 42 படுக்கைகள் உள்ளன. அதில், 16 படுக்கைகள் கர்ப்பிணியருக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணியரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X