பெங்களூரு:பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், அடைக்கப்பட்டிருந்த வில்சன் கார்டன் நாகராஜ், சிவா, ஜார்ஜ் மைக்கேல், பிரதீப், பாம்பே சலிம் உட்பட 18 ரவுடிகள், வேறு மாவட்டத்தின் சிறைகளுக்கு, இடம் மாற்றப்பட்டனர்.
பல்வேறு வழக்குகள் தொடர்பாக, ரவுடிகள் பலர், கைதாகி பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறையில் இருந்து கொண்டே, பெங்களூரில் ரவுடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சதி திட்டம் தீட்டினர்.
இது குறித்து தகவலறிந்த, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த், சில ரவுடிகளை வேறு மாவட்ட சிறைகளுக்கு இடம் மாற்றும்படி, சிறைத்துறை இயக்குனர்களுக்கு, சிபாரிசு செய்திருந்தார். இதன்படி வில்சன் கார்டன் நாகராஜ், சிவா, ஜார்ஜ் மைக்கேல், பிரதீப், பாம்பே சலிம் உட்பட 18 ரவுடிகள், கலபுரகி, பெலகாவி, தார்வாட், ஷிவமொகா, மைசூரு, விஜயபுரா, பல்லாரி மாவட்ட சிறைகளுக்கு, நேற்று இடம் மாற்றப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE