மைசூரில் வார இறுதி ஊரடங்கு வாபஸ் பெற முதல்வருடன் ஆலோசனை:அமைச்சர்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
குடகு:''மைசூரில் வார இறுதி ஊரடங்கை, திரும்ப பெறுவது தொடர்பாக, முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்,'' என கூட்டுறவுத்துறை அமைச்சர் சோமசேகர் தெரிவித்தார். குடகு மடிகேரியில், அவர் கூறியதாவது:மைசூரில் வார இறுதி ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கு அங்குள்ள வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வார இறுதி ஊரடங்கை அகற்றும்படி வலியுறுத்துகின்றனர். இதுபற்றி

குடகு:''மைசூரில் வார இறுதி ஊரடங்கை, திரும்ப பெறுவது தொடர்பாக, முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்,'' என கூட்டுறவுத்துறை அமைச்சர் சோமசேகர் தெரிவித்தார்.

குடகு மடிகேரியில், அவர் கூறியதாவது:மைசூரில் வார இறுதி ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கு அங்குள்ள வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வார இறுதி ஊரடங்கை அகற்றும்படி வலியுறுத்துகின்றனர். இதுபற்றி முதல்வருடன் ஆலோசனை நடத்துவேன். மைசூரில் கொரோனா பரவும் அளவு, ஒரு சதவீதமாக உள்ளது.

வார இறுதி ஊரடங்கு வேண்டாம் என, ஏற்கனவே கூறியுள்ளேன். கொரோனா அளவு ஒரு சதவீதத்துக்கும் குறைவாக காணப்பட்டால், ஊரடங்கு தளர்த்தப்படும். புதிய அரசில் எந்த பிரச்னைகளும் இல்லை. அமைச்சர் ஆனந்த் சிங் அதிருப்தி உட்பட அனைத்து பிரச்னைகளையும் சமாளிக்கும் திறன், முதல்வருக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X