பொது செய்தி

இந்தியா

திடக்கழிவு மேலாண்மை திட்டம் மேம்படுத்த புதிய நிறுவனம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
பெங்களூரு:பெங்களூரு மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த, மாநில அரசு புதிய நிறுவனத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மாநில அமைச்சரவை கூட்டத்தில், பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்துடன் மாநில அரசும் இணைந்து, இந்நிறுவனத்தின் மூலம் கழிவுகளிலிருந்து உரம்

பெங்களூரு:பெங்களூரு மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த, மாநில அரசு புதிய நிறுவனத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

மாநில அமைச்சரவை கூட்டத்தில், பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்துடன் மாநில அரசும் இணைந்து, இந்நிறுவனத்தின் மூலம் கழிவுகளிலிருந்து உரம் தயாரிப்பதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தவும், பராமரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், பல திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. மாநகரின் உட்கட்டமைப்பு உட்பட பல பிரச்னைகளுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.மாநகராட்சி விதிமுறைகள், கொரனோ தடுப்பு பணிகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.இப்பணிகளால், திடக்கழிவு மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முடியாமல் சிரமம் ஏற்படுகிறது.

அன்றாட கழிவுகள் துாய்மைப்படுத்தப்படுவது; கழிவுகளை பிரித்து உரமாக்குவதிலு கூடுதல் பயன்களை எதிர்பார்க்க முடியவில்லை. இதனால், மாநில அரசு, 'பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம்' என்ற அரசு நிறுவனத்தை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இத்திட்டம், மாநகராட்சி தேர்தலுக்கு பின் தான் முழுதும் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது.

இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், வழிநடத்தவும், நிதிஒதுக்கீடு போன்ற அனைத்துமே தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதில், மாநகராட்சி 51 சதவீதமும்; மாநில அரசின் பங்கு 49 சதவீதமுமாக பிரிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் கூடுதல் முதன்மை செயலர் தான், இந்நிறுவனத்தின் முதன்மை செயலராக நியமிக்கப்பட உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X