முற்பட்ட வகுப்பினருக்கு அமைகிறது ஆணையம்?

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்காக பாடுபடும், மத்திய, மாநில அரசுகள், தங்களை புறக்கணிப்பதாக முன்னேறிய வகுப்பினர் கருதுகின்றனர். அத்தகையோரின் நலனுக்காக, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு, தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கோரிக்கைமஹாராஷ்டிராவில், மராத்தா வகுப்பினருக்கான இடஒதுக்கீடு
முற்பட்ட வகுப்பினர், ஆணையம்?

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்காக பாடுபடும், மத்திய, மாநில அரசுகள், தங்களை புறக்கணிப்பதாக முன்னேறிய வகுப்பினர்
கருதுகின்றனர். அத்தகையோரின் நலனுக்காக, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு, தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


கோரிக்கைமஹாராஷ்டிராவில், மராத்தா வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழக்கில், மத்திய அரசுக்குத் தான், சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோரை வகைப்படுத்தும் அதிகாரம் உள்ளதாக, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்து, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் தயாரிக்கும் உரிமையை மாநில அரசுகளுக்கு வழங்கும், சட்ட திருத்தம், பார்லி.,யின் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் 22 சதவீதம் உள்ள முன்னேறிய உயர் வகுப்பினர், தங்கள் நலனுக்காகவும் ஆணையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், இந்தாண்டு துவக்கத்தில் 'பிராமணர்கள், ஷத்ரியர்கள், வைசியர்கள் உள்ளிட்டோர் அடங்கிய பொதுப் பிரிவில், பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் நலனுக்காக, 'சவர்ன ஆயோக்' என்ற ஆணையம் அமைக்கப்படும்' என, மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்திருந்தார். இதை நினைவுபடுத்தி, அவருக்கு பா.ஜ., எம்.எல்.ஏ., நாராயண் திரிபாதி சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளார்.


ஒதுக்கீடுஇதே போல, ஹிமாச்சல் பிரதேச சட்டசபையில், காங்., - எம்.எல்.ஏ., விக்ரமாதித்ய சிங், உயர் வகுப்பினருக்கான ஆணையம் அமைக்க வலியுறுத்தினார். அதை பரிசீலிப்பதாக, ஹிமாச்சல் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குர் உறுதி அளித்துள்ளார். கடந்த 2019ல் மத்திய அரசு, பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது
குறிப்பிடத்தக்கது. -நமது சிறப்பு நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-ஆக-202123:29:34 IST Report Abuse
Pugazh V "சொரியார், வாழைமட்டை என்றெல்லாம் இப்படி எழுதும் நீங்கள் முன்னேறிய வகுப்பினர்" அல்ல தான். மிகவும் கேவலமான நாகரிகமற்ற பண்பாடற்ற.சாக்கடைப்பிறவி வகுப்பினர் என்பதே சரி.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-ஆக-202123:28:24 IST Report Abuse
Pugazh V இப்படி எழுதும் நீங்கள் முன்னேறிய வகுப்பினர்" அல்ல தான். மிகவும் கேவலமான நாகரிகமற்ற பண்பாடற்ற.சாக்கடைப்பிறவி வகுப்பினர் என்பதே சரி.
Rate this:
Cancel
ravikumark - Chennai,இந்தியா
21-ஆக-202121:51:09 IST Report Abuse
ravikumark Hope Central will make it an order to implement by all states
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X