2024 தேர்தலுக்கு இப்போதே தயாராவோம்: எதிர்க்கட்சிகளுக்கு சோனியா அழைப்பு

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (16+ 26)
Share
Advertisement
புதுடில்லி :''லோக்சபாவுக்கு 2024ல் நடக்க உள்ள தேர்தலுக்கு, நாம் இப்போதே தயாராக வேண்டும். கருத்து வேறுபாடுகளை மறந்து, பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான, ஒற்றுமையான கூட்டணி அமைப்பதே நம் இலக்கு,'' என, எதிர்க்கட்சி தலைவர்களிடம், காங்கிரஸ் தலைவர் சோனியா கூறினார்.லோக்சபாவுக்கு 2024ல் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சிகள்
2024 லோக்சபா தேர்தல்,தயாராவோம்!, எதிர்க்கட்சி ,சோனியா

புதுடில்லி :''லோக்சபாவுக்கு 2024ல் நடக்க உள்ள தேர்தலுக்கு, நாம் இப்போதே தயாராக வேண்டும். கருத்து வேறுபாடுகளை மறந்து, பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான, ஒற்றுமையான கூட்டணி அமைப்பதே நம் இலக்கு,'' என, எதிர்க்கட்சி தலைவர்களிடம், காங்கிரஸ் தலைவர் சோனியா கூறினார்.

லோக்சபாவுக்கு 2024ல் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சிகள் துவங்கியுள்ளன. மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் மாநில கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.


நம்பிக்கைஎனினும் தன் தலைமையில் கூட்டணி அமைவதைத்தான் காங்கிரஸ் விரும்புகிறது. இந்நிலையில், போன் ஒட்டு கேட்பு விவகாரத்தை வைத்து பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முழுமையாக முடக்கின. இந்த கூட்டத்தொடரில், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து நின்றன. பார்லி.,யில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் காட்டிய ஒற்றுமை, காங்கிர சுக்கு சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி., ராகுலும், கடந்த வாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சிற்றுண்டி அளித்து ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, 19 எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று ஆலோசனை நடத்தினார். 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்.பி., ராகுல், தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


ஒற்றுமைஇந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியதாவது: பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் காட்டிய ஒற்றுமை மகிழ்ச்சியளிக்கிறது. பார்லிமென்டுக்கு வெளியேயும், நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம். 2024ல் நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தல் தான் நம் இலக்கு. அதற்கு நாம் இப்போதே தயாராக வேண்டும்.

அரசியல் சாசனத்தின் கொள்கைகள் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையும், மதிப்பும் வைத்துள்ள அரசு அமைய வேண்டும் என்பது தான், நம் ஒரே எண்ணமாக இருக்க வேண்டும். லோக்சபா தேர்தலில் நம்மிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு, பா.ஜ.,வுக்கு எதிரான வலுவான, ஒற்றமையான கூட்டணி அமைக்க வேண்டும். இந்த முயற்சியில் காங்கிரஸ் ஒரு போதும் பின் வாங்காது. லோக்சபா தேர்தலுக்கு முன் நடக்க உள்ள பல மாநில சட்டசபை தேர்தல்களிலும், நாம் நம் ஒற்றுமையை வெளிப்படுத்தி, தேர்தலில் போட்டியிட வேண்டும்.

அடுத்து வரும் பார்லி., கூட்டத் தொடர்களிலும் ஒன்றிணைந்து செயல்பட்டு, மத்திய அரசுக்கு நெருக்கடி தர வேண்டும். இவ்வாறு சோனியா பேசினார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இப்படி எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டம் நடத்தினாலும், கூட்டணிக்கு யார் தலைமையேற்பது என்பதில் காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் இடையே போட்டி இருக்கும் நிலையில், அது முழுமை பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


கபில் சிபலுக்கு பதிலடிகாங்கிரசுக்கு நிரந்தர தலைமை கேட்டு சோனியாவுக்கு, கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் எழுதிய கடிதத்தால் ஏற்பட்ட பிரச்னை, தொடர்ந்து நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது. இந்த,
23 பேரில் முக்கியமானவர், முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல். இவர் கடந்த வாரம், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இரவு விருந்தளித்தார். இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சசி தரூர், ஆனந்த் சர்மா, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தி.மு.க., - எம்.பி., சிவா, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இது சோனியாவுக்கும், ராகுலுக்கும் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான், எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா நேற்று
ஆலோசித்ததாக தெரிய வந்துள்ளது.


மக்கள் தான் தலைவர்சோனியா நடத்திய ஆலோசனை கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:பா.ஜ.,வுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக போராட வேண்டும். கூட்டணிக்கு யார் தலைவர் என்ற கேள்வி தேவையில்லை. மக்கள் தான் தலைவர். முக்கிய குழு ஒன்றை அமைத்து, மத்திய அரசுக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (16+ 26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balakrishnan S - Trichy,இந்தியா
21-ஆக-202120:26:33 IST Report Abuse
Balakrishnan S சோனியா சொல்வது வாஸ்தவம்தான்.. இப்ப இருந்தே உழைச்சாத்தானே ஒருசில தொகுதியிலாச்சும் டெபாசிட் பறிபோகாம காப்பாத்தலாம்...???
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
21-ஆக-202118:32:47 IST Report Abuse
Poongavoor Raghupathy சோனியா காந்தி மிஞ்சிய காலங்களில் அமைதியாக இருக்க கருதினால் அவர் ராகுல் காந்தியை அழைத்துக்கொண்டு இத்தாலி சென்று ரெஸ்ட் எடுப்பது நல்லது. காங்கிரெஸ்ஸை சேர்த்தால் தன கட்சிக்கு வோட்டு வரத்து என்று மற்ற கட்சிகள் காங்கிரெஸ்ஸை ஒதுக்கிவைத்ததை நம் பார்த்தோம். மோடியை விட்டால் தற்சமயம் இணையான தலைவர் இல்லாததால் காங்கிரஸ் உடைந்த கப்பலில் சவாரி செய்வதாலும் மோடி தான் அடுத்த பிரதமர்.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
21-ஆக-202117:26:47 IST Report Abuse
jagan படிப்பறிவு, உலக அறிவு மற்றும் வரலாறு தெரியாத மக்கள் அதிகம் உள்ள இந்தியாவிற்கு தேர்தல் முறை சரிப்பட்டு வராது. RSS நாட்டை 25 ஆண்டுகள் ஆளவேண்டும். தேர்தல் தேவையில்லாத செலவு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X