ரகசிய திருமணம் செய்தவர் தற்கொலை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சித்ரதுர்கா:இரண்டு திருமணம் செய்து கணவரை விட்டு பிரிந்த பெண்ணுக்காக நிலத்தை விற்று, பல இடங்களில் கடன் வாங்கிய நபரொருவர், மனம் நொந்து, தற்கொலை செய்து கொண்டார். சித்ரதுர்கா ஹிரியூரின், ரங்கநாதபுரா கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சுண்டசாமி, 30. இவர், பட்ரிஹள்ளி கிராமத்தின் தேஜூ தேமிளு, 30, என்பவரை காதலித்தார். இப்பெண் ஏற்கனவே, இரண்டு திருமணம் செய்து, கணவரை விட்டு பிரிந்தவர்.

சித்ரதுர்கா:இரண்டு திருமணம் செய்து கணவரை விட்டு பிரிந்த பெண்ணுக்காக நிலத்தை விற்று, பல இடங்களில் கடன் வாங்கிய நபரொருவர், மனம் நொந்து, தற்கொலை செய்து கொண்டார்.

சித்ரதுர்கா ஹிரியூரின், ரங்கநாதபுரா கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சுண்டசாமி, 30. இவர், பட்ரிஹள்ளி கிராமத்தின் தேஜூ தேமிளு, 30, என்பவரை காதலித்தார். இப்பெண் ஏற்கனவே, இரண்டு திருமணம் செய்து, கணவரை விட்டு பிரிந்தவர். நஞ்சுண்ட சாமியும், தேஜூ தேமிளும் மூன்று ஆண்டுகளுக்கு முன், யாருக்கும் தெரியாமல், செல்லகரே நாயகனஹட்டி திப்பேருத்ரசுவாமி கோவிலில், ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.

தேஜூவுக்காக நஞ்சுண்ட சாமி, தன் நிலத்தை விற்றது மட்டுமின்றி, பல இடங்களில் கடன் வாங்கி, கடனாளியானார். ஆனால் திருமணத்துக்கு பின், தேஜூ வேறொருவருடன் கள்ளத் தொடர்பு வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.இதையறிந்து மனம் நொந்த நஞ்சுண்டசாமி, தன் இறப்புக்கு தேஜூவே காரணம் என, சமூக வலைதளங்களில், விவரித்துவிட்டு, இருவரும் உள்ள போட்டோக்களை வெளியிட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹிரியூர் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X