வரவேண்டிய நேரத்துக்கு வருவாராம்!

Added : ஆக 20, 2021
Share
Advertisement
வரவேண்டிய நேரத்துக்கு வருவாராம்! கட்சிக்காரங்க எல்லாம் மாநகராட்சி தேர்தல், அடுத்த அசம்பிளி தேர்தலுக்காக சுழல தொடங்கிட்டாங்க. இந்த சுழற்சியில், புல்லுக்கட்டோட யூத் தலைவரை, காணலன்னு பேசிக்கிறாங்க.எடுத்த எடுபுலேயே செங்கோட்டைக்கு நுழைய மாண்டியாவுல போட்டி போட்டு, 'மாஜி' நடிகையிடம் தோற்றுப் போனதுக்கு அப்புறம், இவருக்கு பாலிடிக்ஸ் ஒத்துழைக்கல. இருந்தாலும் இவரை

வரவேண்டிய நேரத்துக்கு வருவாராம்! கட்சிக்காரங்க எல்லாம் மாநகராட்சி தேர்தல், அடுத்த அசம்பிளி தேர்தலுக்காக சுழல தொடங்கிட்டாங்க. இந்த சுழற்சியில், புல்லுக்கட்டோட யூத் தலைவரை, காணலன்னு பேசிக்கிறாங்க.எடுத்த எடுபுலேயே செங்கோட்டைக்கு நுழைய மாண்டியாவுல போட்டி போட்டு, 'மாஜி' நடிகையிடம் தோற்றுப் போனதுக்கு அப்புறம், இவருக்கு பாலிடிக்ஸ் ஒத்துழைக்கல. இருந்தாலும் இவரை அவங்க கட்சியோட யூத் தலைவராக பட்டாபிஷேகம் செய்தாங்க. ஆனா கட்சி வேலையில் கூட ஆர்வம் இல்லாதவர் போல மந்தமா இருக்கிறாருன்னு தாத்தாவுக்கும் தெரிஞ்சிருக்கு. இவங்க குடும்ப கம்பெனி தான் கட்சியா இருப்பதாலே, வெளிப்படையா மற்றவங்க கேள்வி கேட்க தயங்குறாங்களாம். இருந்தாலும், தனது மகனுக்கு பண்ணை வீட்டில், பாலிடிக்ஸ் பயிற்சி கொடுத்து வராறாம் மாஜி சி.எம்., வரவேண்டிய நேரத்தில் கோதாவில் இறங்கி கலக்க போறாராம்.

தந்திரத்துக்கு தந்திரம்!

மாவட்டந்தோறும் கைக்கார தலைவர்கள் மக்கள் தரிசனம் பேர்ல, கூட்டம், மாநாடுன்னு நடத்தி வர்ராங்க; ஒவ்வொரு தொகுதியிலும் ரெண்டு மூணு கோஷ்டிகள் இருப்பதை ஜல்லடை போட்டு கண்டுபிடிச்சிருக்காங்க. இவங்க தொகுதிக்குள் பிரிஞ்சி இருப்பதை ஒண்ணு சேர்க்க, ஸ்டேட் தலைவருங்க முயற்சி எடுக்குறாங்களோ இல்லையோ, ஆனால், தனக்கொரு கோஷ்டியை ஏற்படுத்திக்கிற வேலைகளை பார்க்க தவறல.மாநில தலைவர், மாஜி சி.எம். இருவருமே தனித்தனியா அணியை ஏற்படுத்தி வர்ராங்க. அசம்பிளி தேர்தலில் டிக்கெட் தரும் போது, இவங்க பிரிவினைக்கு யாரோட தந்திரம் ஜெயிக்குமோ.

பெருசா ஒத்துழைப்பு தரல!

மத்திய மந்திரிங்க 'ஜன ஆசி யாத்திரை' நடத்தி வராங்க. பூக்கார மாவட்ட தலைவர்கள், இவங்களுக்கு பெருசா ஒத்துழைக்கலையாம். இந்த யாத்திரையை வெற்றிகரமா நடத்தி முடிக்க மாநில தலைமையின் கட்டளை காணோம் மத்திய மந்திரிங்க எதிர்ப்பார்த்தப்படி சக்சஸ் ஆகலன்னு அவர்கள் வெளியே காட்டிக்க முடியலையாம்.பூக்கார மத்திய மந்திரிகளுக்கு, மாநிலத்தோட மாவட்ட மந்திரிங்களும் தடபுடல் வரவேற்புக்கு ஏற்ற வேலையை கவனிக்கலயாம்.ஏதோ, கட்சி நிகழ்ச்சி நடக்குது. கொடித்துாக்க கூட்டம் சேருது. வழக்கமான அறிவிப்புகளை வாரி தரப்போறாங்க. அதனால், பந்தா காட்டாமல், கொரோனாவை சாக்காக வைத்து ஆச்சா, போச்சானு நிகழ்ச்சியை முடிக்கிறாங்களாம்.

வாரியங்களுக்கு 'லாபி!'

எடி.,ஜி முதல்வரா இருந்தப்போ வழங்கின வாரிய தலைவர்கள், டைரக்டர்கள் பதவிகளை பறிக்க போறாங்க. புதுசா நியமனம் செய்ய திட்டம் போட்டிருக்காங்க.பவரான வாரியங்களை பிடிக்க, பூக்கார எம்.எல்.ஏ.,க்கள் 'லாபி' நடத்தி வர்ராங்க. பி.டி.ஏ., - கே.எஸ்.ஆர்.டி.சி., ஹட்டி கோல்டு மைன்ஸ் உட்பட கேபினட் மினிஸ்டர் தரத்துக்கு ஒப்பான வாரியங்களுக்கு 'டாப் லெவல்' சிபாரிசுகள் பெற்று வர டில்லி வரை போய் வந்திருக்காங்க. மந்திரி பதவி 'லாபி' முடிந்து, மந்திரிகளின் துறை அதிருப்தி தணிந்து, வாரிய பதவிகளில் 'லாபி' நடக்குது. இதையும் பொறுமையா டீல் செய்ய போறாராம், நம்ம சி.எம்.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X