அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் எப்போ? செப்., 13க்கு பின் அறிவிப்பு!

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : செப்டம்பர் 13ம் தேதிக்கு பின், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பதற்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை
உள்ளாட்சி தேர்தல்,செப்., 13, அறிவிப்பு!

சென்னை : செப்டம்பர் 13ம் தேதிக்கு பின், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பதற்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், 2019ல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஊரக உள்ளாட்சிகள் இல்லாததால், தேர்தல் நடக்கவில்லை. செப்., 15க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.
தற்போது சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது. செப்., 13ம் தேதி வரை, துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கஉள்ளது.

இந்த நேரத்தில், உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவித்தால், தேர்தல் நடக்கவுள்ள மாவட்டங்களுக்கு, திட்டங்களை அறிவிக்க முடியாது. எனவே, செப்., 13க்கு பின் உள்ளாட்சி தேர்தலை அறிவித்து, அக்டோபர் முதல் வாரத்தில் தேர்தலை நடத்தி முடிக்க, மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக, ஒன்பது மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன், சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், விரைவில் ஆலோசனை நடக்க இருக்கிறது.



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
21-ஆக-202109:03:08 IST Report Abuse
duruvasar அப்போ அதுக்குள்ள தகுதி வாய்ந்தவர்களுக்கு மாதாந்திர உதவி தொகை கிடைச்சிடும். ஹய்யா. அப்படியே அந்த மாதந்திர மின்கணக்கீடு மேட்டரையும் கவனிச்சா அமோக வெற்றிதான். இதற்காக தனியாக எந்த ஜோசியனையும் பார்க்க அவசியமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X