1.82 லட்சம் மளிகை தொகுப்புகள் கொரோனா பாதித்தோருக்கு சப்ளை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

1.82 லட்சம் மளிகை தொகுப்புகள் கொரோனா பாதித்தோருக்கு 'சப்ளை'

Added : ஆக 20, 2021
Share
சென்னை:ரேஷன் கடைகளில், 1.82 லட்சம் கார்டுதாரர்கள் வாங்காத மளிகை தொகுப்புகளை, குடிசை பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதித்த குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட கலெக்டர்களை, உணவு வழங்கல் துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழக ரேஷன் கடைகளில், ஜூன் மாதம் 2.09 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு கோதுமை மாவு, ரவை உள்ளிட்ட 14 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வினியோகம்

சென்னை:ரேஷன் கடைகளில், 1.82 லட்சம் கார்டுதாரர்கள் வாங்காத மளிகை தொகுப்புகளை, குடிசை பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதித்த குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட கலெக்டர்களை, உணவு வழங்கல் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், ஜூன் மாதம் 2.09 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு கோதுமை மாவு, ரவை உள்ளிட்ட 14 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டது.அதை, ஜூலை வரை வாங்க அவகாசம் அளிக்கப்பட்டது.இருப்பினும், 1.82 லட்சம் கார்டுதாரர்கள் மளிகை தொகுப்பை வாங்கவில்லை. அவற்றை ரேஷன் கடைகளில் இருந்து எடுத்து, பொது பயன்பாட்டின் கீழ் வினியோகிக்க, கலெக்டர்களுக்கு உணவு வழங்கல் துறை உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக, மீதமுள்ள மளிகை பொருட்களை, குடிசை பகுதிகளில் கொரோனா பாதித்த மற்றும் குணமடைந்த குடும்பங்கள், அரசு மனநல காப்பகங்களில் உள்ளவர்களின் குடும்பங்கள்.தொழு நோயாளிகள் குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, கலெக்டர்களை, உணவு வழங்கல் துறை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், கலெக்டர்கள் விருப்ப அடிப்படையில், பொது நல அரசு சார்பு, அரசு சாரா அமைப்புகளில் தங்கி பயன் பெற்று வரும், பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகளின் குடும்பங்களுக்கு வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு வினியோகிக்கும் போது, ஒரு குடும்பத்திற்கு ஒரு மளிகை தொகுப்பு மட்டும் வழங்கப்பட வேண்டும் என்றும், தொகுப்பில் காலாவதியான பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X