பொது செய்தி

தமிழ்நாடு

தசைநார் சிதைவு நோய் சிறுமி ரூ.16 கோடி ஊசிக்கு தவிப்பு

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தஞ்சாவூர் :தஞ்சாவூரில், முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு, ஊசி மருந்து வாங்க, 16 கோடி ரூபாய் தேவைப்படுவதால் பெற்றோர் தவித்து வருகின்றனர்.தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை, சீராஜ்பூர் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஸ், 32. ரெப்கோ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வரும் இவரது மனைவி எழிலரசி, 32; அதே வங்கியில், இளநிலை உதவியாளர்.இவர்களின் 2 வயது மகள்
தசைநார் சிதைவு நோய் சிறுமி ரூ.16 கோடி ஊசிக்கு தவிப்பு

தஞ்சாவூர் :தஞ்சாவூரில், முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு, ஊசி மருந்து வாங்க, 16 கோடி ரூபாய் தேவைப்படுவதால் பெற்றோர் தவித்து வருகின்றனர்.
தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை, சீராஜ்பூர் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஸ், 32. ரெப்கோ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வரும் இவரது மனைவி எழிலரசி, 32; அதே வங்கியில், இளநிலை உதவியாளர்.
இவர்களின் 2 வயது மகள் பாரதிக்கு, முதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோய் இருப்பது, 9ம் தேதி கண்டறியப்பட்டது. சிறுமி தானாக எழுந்து நிற்க முடியாமல், தவித்து வருகிறாள்.
சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், '16 கோடி ரூபாய் மதிப்பிலான, 'ஙூOஃஎஉNகுMஅ' என்ற ஊசி மருந்து செலுத்தினால் மட்டுமே நோயை குணப்படுத்த முடியும். மருந்தின் விலையுடன் இறக்குமதி வரி, 6 கோடி சேர்த்து, 22 கோடி ரூபாய் செலவாகும்' என கூறியுள்ளனர்.
ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கப்பட்டு, குணமடைந்த நாமக்கல் சிறுமி மித்ரா சிகிச்சை பெற்ற பெங்களூரு மருத்துவமனையில், நான்கு நாட்களாக பாரதிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிறுமியின் தந்தை ஜெகதீஸ் கூறியதாவது:ஊசி மருந்துக்கான பெரிய தொகையை, எங்களால் திரட்ட முடியாது. நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து, 50 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. உதவி கேட்டு, முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.பொதுமக்களிடமும் உதவி கேட்டுள்ளோம். இன்னும் இரண்டு மாதங்களுக்குள், குழந்தைக்கு ஊசியை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


இவர்களுக்கு உதவ,



97917 93435, 95975 84987 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velusamy Ramesh - Thanjavur,இந்தியா
21-ஆக-202111:49:47 IST Report Abuse
Velusamy Ramesh contact ketto.org....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X