பொது செய்தி

தமிழ்நாடு

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தப்படுமா?

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சென்னை:மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தை, மின் வாரியம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழக மின் வாரியம், 44 மின் பகிர்மான வட்டங்களாக செயல்படுகிறது. ஒவ்வொரு வட்டத்திலும் மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் செயல்படுகிறது. இது, ஒரு தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது.அதன் தலைவராக, மின் வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் உள்ளார். உறுப்பினர்களாக,

சென்னை:மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தை, மின் வாரியம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக மின் வாரியம், 44 மின் பகிர்மான வட்டங்களாக செயல்படுகிறது. ஒவ்வொரு வட்டத்திலும் மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் செயல்படுகிறது. இது, ஒரு தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது.அதன் தலைவராக, மின் வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் உள்ளார். உறுப்பினர்களாக, கலெக்டர் நியமித்த ஒரு நபரும், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நியமித்த மற்றொரு நபரும் இருப்பர்.

மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும், குறிப்பிட்ட இடைவெளியில் குறைதீர் கூட்டம் நடக்கும். இந்த விபரம், மின் வாரியம் சார்பில் மக்களுக்கு தெரிவிக்கப்படும். மின் தடை உள்ளிட்ட மின்சார சேவைகளால் பாதிக்கப்படுவோர், கூட்டத்தில் புகார் அளிக்கலாம்.அதை விசாரித்து தீர்வு வழங்கப்படும். தீர்ப்பை ஏற்காதவர், ஒழுங்குமுறை ஆணையத்தில் உள்ள குறைதீர்ப்பாளரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

மின் வாரியம் மீது தவறு இருந்தால், அவர் இழப்பீடு வழங்க உத்தரவிடுவார்.சட்டசபை தேர்தல், கொரோனா பரவல் போன்ற காரணங்களால், மார்ச் இறுதியில் இருந்து மின் குறைதீர் கூட்டம் நடத்தப்படவில்லை. தற்போது, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அதிக தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், குறைதீர்கூட்டம் நடத்தப்படவில்லை. எனவே, மின்சார பிரச்னைகளுக்கு தீர்வு காண, குறைதீர் கூட்டத்தை விரைந்து நடத்த நுகர்வோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X