அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பன்னீர்செல்வத்தை விசாரிக்கணும்'

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'தரமற்ற கட்டுமான விவகாரத்தில், முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், ஒப்பந்த நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்புகளை விசாரிக்க வேண்டும்' என, மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.அதன் மாநில செயலர் செந்தில் ஆறுமுகம் அறிக்கை:சென்னை புளியந்தோப்பு, குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின், பாதுகாப்பு தன்மை குறித்து, வெளியான ஆதாரங்கள்

சென்னை:'தரமற்ற கட்டுமான விவகாரத்தில், முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், ஒப்பந்த நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்புகளை விசாரிக்க வேண்டும்' என, மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அதன் மாநில செயலர் செந்தில் ஆறுமுகம் அறிக்கை:சென்னை புளியந்தோப்பு, குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின், பாதுகாப்பு தன்மை குறித்து, வெளியான ஆதாரங்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளன. இங்கு, 112.6 கோடி ரூபாய் செலவில், 864 வீடுகள், அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டு உள்ளன.

தென்பெண்ணை ஆற்றில் தடுப்புச்சுவர், காஞ்சிபுரத்தில் கட்டப்பட்ட தடுப்பணை, செங்கல்பட்டு வாயலுார் பாலாற்றில் கட்டப்பட்ட தடுப்பணை என, பல கட்டுமான பணிகளில் தரமில்லை.இதுபோன்ற முறைகேட்டிற்கு பின்னால் இருந்த அமைச்சர், உயர் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் மீது, பெரும்பாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த மூவர் கூட்டணி செய்யும் ஊழலால் பாதிக்கப்பட்டு, தெருவில் நிற்பது பொது மக்களே.

துறை அமைச்சரை தாண்டி, முறைகேடுகள் நடப்பதற்கு சாத்தியமில்லை.முன்னாள் அமைச்சர் வேலுமணியோடு தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள் விசாரிக்கப்பட்டது போல, பன்னீர்செல்வத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும், ஒப்பந்த நிறுவனங்கள் குறித்தும், விசாரிக்கப்பட வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


2 அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'கு.மா., வாரியம் அதிரடி

தரம் குறைந்த கட்டுமானம் காரணமாக, இரண்டு அதிகாரிகளை, தற்காலிக பணி நீக்கம் செய்து, குடிசை மாற்று வாரியம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, புளியந்தோப்பு கே.பி., பூங்கா பகுதியில் இருந்த பழைய குடியிருப்புகளை இடித்து, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இங்கு, 252 கோடி ரூபாய் செலவில், 1,920 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த கட்டடங்களில் பல இடங்களில், சுவரின் மேற்பூச்சு பெயர்ந்து விழுவதாக, புகார் எழுந்தது. துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகள், கட்டடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.கட்டடத்தின் உறுதி தன்மை குறித்து, ஐ.ஐ.டி., என்ற, இந்தி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன வல்லுனர்கள் ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில், கண்காணிப்பில் கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.அதன் அடிப்படையில், கே.பி., பார்க் குடியிருப்பு கட்டுமான பணிக்கு பொறுப்பான, உதவி செயற்பொறியாளர் அன்பழகன், உதவி பொறியாளர் பாண்டியன் ஆகியோர் , 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஆக-202123:19:52 IST Report Abuse
தமிழவேல் இடத்தை மாத்திப் போடாம சஸ்பெண்டாவது செய்தானுவோலே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X