பொது செய்தி

தமிழ்நாடு

''தமிழகத்தில் கொரோனா பரவல் 1 சதவீதத்துக்குள் வந்தது

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை : ''தமிழகத்தில் கொரோனா பரவல், 1 சதவீதத்துக்கு கீழ் குறைந்துள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள தடுப்பூசிகள் சேமிப்பு கிடங்குகளில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.பின், செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த
கொரோனா பரவல் 1 சதவீதம், வந்தது

சென்னை : ''தமிழகத்தில் கொரோனா பரவல், 1 சதவீதத்துக்கு கீழ் குறைந்துள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள தடுப்பூசிகள் சேமிப்பு கிடங்குகளில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின், செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் முதல் முறையாக, 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இதுவரை, 2.70 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இரண்டாம் தவணைக்கான அவகாசம் முடிந்தும், 10 லட்சம் பேர் கோவிஷீல்டு; 3.5 லட்சம் பேர் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடம் ஆர்வம் குறைந்து உள்ளது. அதிக தடுப்பூசி கையிருப்பில் இருப்பதால், மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும்.

சென்னை, கோவை, தஞ்சாவூர், திருப்பூர், ஈரோடு போன்ற 17 மாவட்டங்களில், 1 சதவீதத்துக்கு மேல் தொற்று பரவல் உள்ளது. ஆனால், மாநில சராசரியில், 1 சதவீதத்துக்கு கீழ் குறைந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொற்று குறைகிறது என மக்கள் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறுகையில், ''பள்ளிகள் திறப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, பள்ளி கல்வித் துறைக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
21-ஆக-202109:05:13 IST Report Abuse
duruvasar எவ்வளவு காட்டனுமுன்னு மாசு ஃபுல் கண்டோரல வெச்சிருக்கிறார்.
Rate this:
Cancel
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
21-ஆக-202107:09:34 IST Report Abuse
ديفيد رافائيل உள்ளாட்சி தேர்தல் நடத்துறதுக்கு தானே இப்படி Corona வை குறைச்சு காமிக்குறீங்க
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
21-ஆக-202102:44:46 IST Report Abuse
BASKAR TETCHANA கோரோனோ விஷயத்தில் நம்ப முடியாத செய்திகள் நிறைய உலா வருகின்ற. இன்னும் கோரோனோ முடியவில்லை எல்லா செய்திகளும் மறைக்க படுகின்றன.. இறப்புகள் அதிகம். னாய் தோற்றும் வரவர அதிகமாகி கொண்டு இருக்கிறது என்று மத்திய அரசு சொல்லுகிறது. ஆனால் தமிழகத்தில் மா.சு.வாழ் எல்லாம் திரை போட்டு மறைக்க படுகிறது. இல்லை என்றால் என் முதல்வர் ஊரடங்கு சட்டத்தை நீடிக்க வேண்டும். என்னமோ நடக்குது மர்மமாய் இருக்கிறது. ஒன்றுமே புரியலை தமிழகத்திலே. ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X