2 சிறுமியர் திருமணம் தடுத்து நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2 சிறுமியர் திருமணம் தடுத்து நிறுத்தம்

Added : ஆக 20, 2021
Share
விருத்தாசலம்1-கடலுார் மாவட்டத்தில் நேற்று வெவ்வேறு இடங்களில் நடக்க இருந்த 2 சிறுமிகளின் திருமணத்தை சமூக நலத்துறையினர் தடுத்து நிறுத்தினர். கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த சாங்காங்குடி மேலத்தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் மணிகண்டன், 23; முடிதிருத்தும் தொழிலாளி, வாய்பேசமுடியாதவர்.இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் நேற்று திருமணம் செய்து வைக்க பெற்றோர்

விருத்தாசலம்1-கடலுார் மாவட்டத்தில் நேற்று வெவ்வேறு இடங்களில் நடக்க இருந்த 2 சிறுமிகளின் திருமணத்தை சமூக நலத்துறையினர் தடுத்து நிறுத்தினர். கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த சாங்காங்குடி மேலத்தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் மணிகண்டன், 23; முடிதிருத்தும் தொழிலாளி, வாய்பேசமுடியாதவர்.இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் நேற்று திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்திருந்தனர்.பெருமாத்துார் அம்மன் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. தகவலறிந்த ஒரத்துார் போலீசார், நேற்று முன்தினம் இரவு சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அவர்களை கடலுாரில் உள்ள குழந்தைகள் மற்றும் சமூகநலத்துறை அலுவலகத்தில் ஆஜராக அறிவுறுத்தினர்.இதே போல் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், பெரம்பலுார் மாவட்டம், சிலம்பூரைச் சேர்ந்த ராஜா, 25, என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது.தகவல் அறிந்த மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் அன்பழகி, சைல்டு லைன் ஆலோசகர் பார்த்திபராஜ் தலைமையில், விருத்தாசலம் சமூக நலத்துறை அலுவலர்கள் விசாரித்தனர். பூதாமூரில் உள்ள கோவிலில் நடைபெற இருந்த சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.கடலுார் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் சிறுமியுடன் பெற்றோர் ஆஜராக அறிவுறுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X