சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெடிகுண்டு வீசிய வழக்கு: 2 பேருக்கு 'குண்டாஸ்'

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கடலுார்,-நாட்டி வெடிகுண்டு வீசிய வழக்கில் 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம் நெய்வேலி, வட்டம் 21ஐச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் ஜெயபால், 25; இவரது நண்பர் வெங்கடேசன். இவர் சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி மகன் சிவா என்பவரின் கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வந்தார். இவரிடம் ஜெயபால் பேசிக் கொண்டிருந்தார்.இதனால்

கடலுார்,-நாட்டி வெடிகுண்டு வீசிய வழக்கில் 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம் நெய்வேலி, வட்டம் 21ஐச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் ஜெயபால், 25; இவரது நண்பர் வெங்கடேசன். இவர் சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி மகன் சிவா என்பவரின் கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வந்தார். இவரிடம் ஜெயபால் பேசிக் கொண்டிருந்தார்.இதனால் ஆத்திரமடைந்த வீரமணி தரப்பினர், கடந்த மாதம் 7ம் தேதி ஜெயபாலை தாக்கி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை மிரட்டல் விடுத்தனர்.நெய்வேலி தர்மல் போலீசார் வழக்குப் பதிந்து வட்டம் 21ஐ சேர்ந்த வீரமணி, 40; சுதாகர், 23; சத்தியமூர்த்தி, கார்த்தி உட்பட 9 பேரை கைது செய்தனர்.முக்கிய குற்றவாளியான வீரமணி மீது நெய்வேலி தர்மல் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்படுகிறது. கொலை, கொள்ளை உள்ளிட்ட 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுதாகர் மீதும் ரவடி பட்டியல் பராமரிக்கப்படுகிறது.இருவரின் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாலசுப்ரமணியத்திற்கு, எஸ்.பி.,சக்தி கணேசன் பரிந்துரை செய்தார். கலெக்டரின் உத்தரவையேற்று, கடலுார் மத்திய சிறையில் உள்ள இருவரிடமும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு கடிதத்தை போலீசார் நேற்று வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X