பொது செய்தி

தமிழ்நாடு

மணிரத்தினம் இல்ல திருமண விழா; அழகிரி, கார்த்தி சிதம்பரம் வாழ்த்து

Added : ஆக 20, 2021
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில்-அகில இந்திய காங்., உறுப்பினரும், தமிழ்நாடு காங்., மாநிலத் துணைத் தலைவருமான மணிரத்தினம் இல்லத் திருமண வரவேற்பு விழா காட்டுமன்னார்கோவில் அடுத்த நாட்டார்மங்கலம், ராஜீவ் காந்தி தேசிய மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது.மணிரத்தினம் மகனும் இளைஞர் காங்., மாநில பொதுச்செயலாளருமான கமல் மணிரத்தினம் - சீர்காழி காங்., மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் கனிவண்ணன்

காட்டுமன்னார்கோவில்-அகில இந்திய காங்., உறுப்பினரும், தமிழ்நாடு காங்., மாநிலத் துணைத் தலைவருமான மணிரத்தினம் இல்லத் திருமண வரவேற்பு விழா காட்டுமன்னார்கோவில் அடுத்த நாட்டார்மங்கலம், ராஜீவ் காந்தி தேசிய மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது.

மணிரத்தினம் மகனும் இளைஞர் காங்., மாநில பொதுச்செயலாளருமான கமல் மணிரத்தினம் - சீர்காழி காங்., மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் கனிவண்ணன் மகள் டாக்டர் பிரசன்னா பிரியா என்பவருக்கும் திருமணம் மற்றும் வரவேற்பு விழா நடந்தது.விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி, முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எம்.பி., மணமக்களை வாழ்த்தினர். மேலும் புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சுப்பிரமணியன், எம்.ஆர்.கே., கல்வி குழுமங்களின் தலைவர் கதிரவன், விருத்தாசலம் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் ராஜவேலு, லட்சுமிகாந்தன், முன்னாள் சுற்றுலா துறை தலைவர் நீல கங்காதரன் ஆகியோர் வாழ்த்தினர். , அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆந்திரபிரதேச செயலாளர் கிறிஸ்டோபர் திலக், மாவட்டத் தலைவர்கள் செந்தில்நாதன், திலகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி, காட்டுமன்னார்கோவில் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் சுதா மணிரத்தினம் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்தினர். மாநில துணைத் தலைவர் மணிரத்தினம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X