காட்டு பன்றிகளால் கரும்பு பயிர்கள் சேதம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள வெங்காளூர் கிராமத்தில் நன்கு விளைந்த கரும்புகளை காட்டுப்பன்றிகள் மேய்வதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.வெங்காளூர், புதுக்குடி உள்ளிட்ட கிராம விவசாயிகள் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் மழையின்றி ஆழ்குழாய் பாசனத்தை மட்டுமே நம்பி விவசாயத்தை துவக்கியுள்ளனர். நன்கு
காட்டு பன்றிகளால் கரும்பு பயிர்கள் சேதம்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள வெங்காளூர் கிராமத்தில் நன்கு விளைந்த கரும்புகளை காட்டுப்பன்றிகள் மேய்வதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

வெங்காளூர், புதுக்குடி உள்ளிட்ட கிராம விவசாயிகள் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.
இப்பகுதியில் மழையின்றி ஆழ்குழாய் பாசனத்தை மட்டுமே நம்பி விவசாயத்தை துவக்கியுள்ளனர். நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராகும் நிலையில், கண்மாய் புதர் பகுதியில் வாழும் காட்டுப்பன்றிகள் இரவு நேரத்தில் கரும்பை மேய்கின்றன. இவை கரும்பு பயிர்களை முறித்து வேருடனும் உண்பதால் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர்.ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில், பன்றிகளை விரட்ட வெடிகளை பயன்படுத்தினாலும் பலன் அளிக்கவில்லை. வேலிகளையும் தாண்டி வருகின்றன.

இது குறித்து உரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலன் இல்லை, என்கின்றனர். ஆகவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுப்பதுடன், வேளாண் துறையினர் தீர்வு காண வேண்டும்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X