போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'போக்சோ' சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது

Added : ஆக 20, 2021
Share
விழுப்புரம்-இருவேறு சம்பவங்களில் சிறுமிகளை கடத்திச் சென்ற 2 வாலிபர்கள் 'போக்சோ' வில் கைது செய்யப்பட்டனர்.விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த கொள்ளூரைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சிவபாலன், 20; சென்னை தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியை 18ம் தேதி கடத்தி சென்றுள்ளார்.புகாரின்பேரில், விழுப்புரம் மகளிர் போலீசார்,

விழுப்புரம்-இருவேறு சம்பவங்களில் சிறுமிகளை கடத்திச் சென்ற 2 வாலிபர்கள் 'போக்சோ' வில் கைது செய்யப்பட்டனர்.விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த கொள்ளூரைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சிவபாலன், 20; சென்னை தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியை 18ம் தேதி கடத்தி சென்றுள்ளார்.புகாரின்பேரில், விழுப்புரம் மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் வழக்குப் பதிந்து, சிவபாலனை கைது செய்தனர்.மற்றொரு வழக்குதிண்டிவனம் அடுத்த பட்டணத்தைச் சேர்ந்தவர் குணசேகரன், 26; கொத்தனார். இவர், 14ம் தேதி 17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார்.புகாரின்பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து குணசேகரனை 'போக்சோ' வில் கைது செய்தனர். சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X