சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தரமற்ற கட்டுமானம்: ரூ.2 கோடி நிறுத்தம்

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
பெரம்பலுார் :பெரம்பலுாரில் தரமற்ற முறையில், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிய ஒப்பந்ததாரருக்கு, 2 கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரியம் சார்பில், பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையம் கிராமத்தில், 41.02 கோடி ரூபாயில், 504 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த வீடுகள், வீடில்லாத ஏழைகள், 440 பேருக்கு, தலா, 1.64 லட்சம் ரூபாய்
தரமற்ற கட்டுமானம், ரூ.2 கோடி நிறுத்தம்

பெரம்பலுார் :பெரம்பலுாரில் தரமற்ற முறையில், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிய ஒப்பந்ததாரருக்கு, 2 கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரியம் சார்பில், பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையம் கிராமத்தில், 41.02 கோடி ரூபாயில், 504 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது.

இந்த வீடுகள், வீடில்லாத ஏழைகள், 440 பேருக்கு, தலா, 1.64 லட்சம் ரூபாய் விலையில் ஒதுக்கப்பட்டன. 139 பேர், புது வீடுகளில் குடியேறியுள்ளனர். இந்த குடியிருப்புகளில், சிமென்ட் பூச்சு பெயர்ந்துஉள்ளதாகவும், வீடுகளுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் தலைமையிலான குழுவினர், குடியிருப்புகளை ஆய்வு செய்தனர்.

பெரம்பலுார் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, நேற்று ஆய்வு செய்து, குடியிருப்புவாசிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்துள்ளதை உடனடியாக சரி செய்யுமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின், கலெக்டர் கூறுகையில், ''அனைத்து குறைகளும், முழுமையாக நிவர்த்தி செய்த பின்னரே, கட்டுமானப் பணி செய்த ஒப்பந்ததாரருக்கான நிலுவைத் தொகை விடுவிக்கப்படும்,'' என்றார்.''ஒப்பந்ததாரருக்கு தர வேண்டிய, 2 கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,'' என, செயற்பொறியாளர் அழகுபொன்னையா தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
21-ஆக-202113:18:41 IST Report Abuse
John Miller பாஜக ஆளும் மாநிலங்களில் தெருக்களில் பாலும் தேனும் ஓடுவது போல் சங்கதிகள் இங்கு எழுதுவது கடைந்து எடுத்த அயேக்கியதனம்.
Rate this:
21-ஆக-202122:27:55 IST Report Abuse
Vittal anand rao.ஆனால் இங்கே சாராயமும் சாகடைகளும் ஓடுவதை மறைக்கும் திராவிட குஞ்சுகள் அதிகம்....
Rate this:
RajanRajan - kerala,இந்தியா
22-ஆக-202120:32:10 IST Report Abuse
RajanRajanதிராவிடன் சுரக்கும் எந்த பாலை சொல்லுறீங்க? லஞ்ச பாலா, ஊழல் பாலா மாற்றான் தோட்டத்து மல்லீகை.......யா....
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
21-ஆக-202112:39:58 IST Report Abuse
S. Narayanan இனி திமுக அரசு மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை அதனால் வீடு வெண்டுவிருக்கு அதற்கு செலவாகும் தொகையை மக்களுக்கு பணம்மக கொடுத்து விட்டால் அவர்கள் அவர்கள் சக்திக்கு ஏற்ப வீடு கட்டி கொள்வர்.ஜெய்ஹிந்த்
Rate this:
Karthik - chennai,இந்தியா
26-ஆக-202116:32:20 IST Report Abuse
Karthikஇந்த வீடுகளை காட்டியது அண்ணா தி மு க அரசு...
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
21-ஆக-202111:23:07 IST Report Abuse
அசோக்ராஜ் நாப்பத்தோரு கோடியில் ரெண்டு கோடி நிறுத்தி வெச்சுட்டீயளா? ஹிஹ்ஹி. பத்து கோடி லாபத்தில் ரெண்டு கோடி தானே? போகட்டும்.
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
29-ஆக-202106:52:22 IST Report Abuse
RaajaRaja Cholanபத்து கோடி லாபமா , என்னையா சொல்ரீங்க குறைந்தது இருபத்தைந்து கோடி லாபம் இருக்கும் இந்த வேளையில்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X