பொது செய்தி

தமிழ்நாடு

உயரம் குறைவாக பிறந்த கன்று பால் குடிக்க முடியாமல் தவிப்பு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சிதம்பரம்-உயரம் குறைவாக பிறந்த கன்று குட்டி, தாய் பசுவிடம் பால் குடிக்க முடியாமல் தவித்து வருகிறது. கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த நலன் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன். விவசாயியான இவர் வளர்த்து வரும் பசு மாடு ஒன்று மூன்றாவது முறையாக கன்று ஒன்றை ஈன்றது.அந்த கன்று உயரம் குறைவாக தரையோடு தரையாக தவழ்ந்து செல்லும் அளவில் உள்ளது. இதனால் தாய் பசுவிடம்

சிதம்பரம்-உயரம் குறைவாக பிறந்த கன்று குட்டி, தாய் பசுவிடம் பால் குடிக்க முடியாமல் தவித்து வருகிறது. கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த நலன் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன். விவசாயியான இவர் வளர்த்து வரும் பசு மாடு ஒன்று மூன்றாவது முறையாக கன்று ஒன்றை ஈன்றது.அந்த கன்று உயரம் குறைவாக தரையோடு தரையாக தவழ்ந்து செல்லும் அளவில் உள்ளது. இதனால் தாய் பசுவிடம் பால் குடிக்க முடியாமலும் நடக்க முடியாமலும் கன்று தவித்து வருகிறது.இதனால் பசுவை வைத்திருக்கும் விஜயன் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே இதே பசு இரண்டு கன்றுகளை ஈன்றபோது சரியான அளவில்தான் இருந்தது. சுற்றியுள்ள பகுதி மக்கள் கன்று குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X