பொது செய்தி

தமிழ்நாடு

புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தை திறப்பு விழா

Added : ஆக 20, 2021
Share
Advertisement
செஞ்சி-செஞ்சியில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தை திறப்பு விழா நடந்தது.செஞ்சியில் கடந்த 2009ம் ஆண்டு திமு.க., ஆட்சியின் போது உழவர் சந்தை திறக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் அடுத்த சில ஆண்டுகளில் மூடப்பட்டது. தற்போது தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றததைத் தொடர்ந்த, 14 லட்சம் ரூபாய் மதிப்பில் உழவர் சந்தை புதுப்பிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது.கலெக்டர் மோகன் தலைமை

செஞ்சி-செஞ்சியில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தை திறப்பு விழா நடந்தது.செஞ்சியில் கடந்த 2009ம் ஆண்டு திமு.க., ஆட்சியின் போது உழவர் சந்தை திறக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் அடுத்த சில ஆண்டுகளில் மூடப்பட்டது. தற்போது தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றததைத் தொடர்ந்த, 14 லட்சம் ரூபாய் மதிப்பில் உழவர் சந்தை புதுப்பிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது.கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் ரமணன் முன்னிலை வகித்தார். அமைச்சர் மஸ்தான் உழவர் சந்தையை திறந்து வைத்து, 15 விவசாயிகளுக்கு அடையாள அட்டை, 30 விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 816 ரூபாய் மதிப்பீட்டில் விவசாய உபகரணங்கள், தோட்டக் கலைத்துறை சார்பில் 6.64 லட்சம் ரூபாய் மதிப்பில் உபகரணங்களை வழங்கினார்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் பெரியசாமி, செஞ்சி தாசில்தார் ராஜன், பி.டி.ஓ., சுப்ரமணி, ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.வேளாண் துணை இயக்குனர் கண்ணகி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X