காவு கேட்கும் கழிவுநீர் கால்வாய்கள்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி: சிங்கம்புணரி பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய்கள் பாதுகாப்பற்ற முறையில் உடைந்து கிடப்பதால் விபத்து அபாயம் நிலவுகிறது .இப்பேரூராட்சியில் சீரணிஅரங்கம் பகுதியிலிருந்து சேவுகப்பெருமாள் கோயில் வரை ரோட்டோரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய தெருக்களில் வெளியேறும் கழிவு நீரும், மழைநீரும் இக்கால்வாய் வழியாக சிங்கம்புணரியை கடந்து
 காவு கேட்கும் கழிவுநீர் கால்வாய்கள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய்கள் பாதுகாப்பற்ற முறையில் உடைந்து கிடப்பதால் விபத்து அபாயம் நிலவுகிறது .இப்பேரூராட்சியில் சீரணிஅரங்கம் பகுதியிலிருந்து சேவுகப்பெருமாள் கோயில் வரை ரோட்டோரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய தெருக்களில் வெளியேறும் கழிவு நீரும், மழைநீரும் இக்கால்வாய் வழியாக சிங்கம்புணரியை கடந்து செல்லும் வகையில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கால்வாயில் சில இடங்களில் தடுப்புச் சுவர் உடைந்து மண் கரைந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இரவு நேரங்களில் டூ வீலர், கார்களில் வருபவர்கள் எதிரில் வரும் வாகனத்திற்கு வழி விடும் போது கால்வாய்க்குள் தவறி விழுந்து ஆழமான கால்வாய் என்பதால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

சுந்தரம் நகர், பாரதி நகர் உள்ளிட்ட மேலும் பல இடங்களிலும் இதேபோல் கால்வாய் உடைந்து காணப்படுகிறது. எனவே உடைந்து கிடக்கும் கால்வாய் தடுப்பு சுவர்களை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X