சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில், மகளின் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பாலி புதுகாலனியைச் சேர்ந்தவர் பாலு மனைவி ராஜலட்சுமி, 27; திருமணமாகி 11 மாதங்கள் ஆகின்றன. பாலு ஊர்க்காவல் படையில் உள்ளார்.பாலு தனது மனைவி ராஜலட்சுமியிடம் அவ்வப்போது வரதட்சணை கேட்டு

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில், மகளின் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பாலி புதுகாலனியைச் சேர்ந்தவர் பாலு மனைவி ராஜலட்சுமி, 27; திருமணமாகி 11 மாதங்கள் ஆகின்றன. பாலு ஊர்க்காவல் படையில் உள்ளார்.பாலு தனது மனைவி ராஜலட்சுமியிடம் அவ்வப்போது வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 9:30 மணியளவில் ராஜலட்சுமி தனது தம்பி சரவணனை தொடர்பு கொண்டு வீட்டில் பிரச்னை நடப்பதால், உடனடியாக வருமாறு கூறியுள்ளார்.சரவணன் சென்று பார்த்தபோது, ராஜலட்சுமி துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.ராஜலட்சுமியின் இறப்புக்கு அவரது கணவர் பாலு மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என எடைக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.ஆனால், போலீசார் வழக்கினை மாற்றியுள்ளதாகவும், இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்யாவிடில், ராஜலட்சுமியின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி, அவரது உறவினர்கள் நேற்று மதியம் 1:25 மணியளவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன், கச்சிராயபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.டி.எஸ்.பி.,க்கள் ராஜலட்சுமி, மணிமொழியன், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, 1:35 மணியளவில் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர். திருமணமாகி 11 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X