தமிழ்நாடு

மெத்தனம்: ரூ.5 கோடி அரசு நிதி ஒதுக்கியும் அதிகாரிகள்...மலட்டாறு மேம்படுத்தும் பணி துவங்கப்படுமா?

Added : ஆக 20, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் மலட்டாறு மேம்படுத்தும் பணிக்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், பணிகள் துவங்காததால், மலட்டாற்றில் இருந்து பிரியும் நரியாற்றிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து தண்ணீரை தேக்கிவைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டுள்ளது. இங்குள்ள, விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குவது தென்பெண்ணை ஆறு. இந்த
 மெத்தனம்: ரூ.5 கோடி அரசு நிதி ஒதுக்கியும் அதிகாரிகள்...மலட்டாறு மேம்படுத்தும் பணி துவங்கப்படுமா?

விழுப்புரம்-விழுப்புரம் மலட்டாறு மேம்படுத்தும் பணிக்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், பணிகள் துவங்காததால், மலட்டாற்றில் இருந்து பிரியும் நரியாற்றிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து தண்ணீரை தேக்கிவைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டுள்ளது. இங்குள்ள, விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குவது தென்பெண்ணை ஆறு. இந்த ஆற்றின் வளத்தைக் கொண்டுதான், மாவட்ட விவசாயிகள் பெரும்பாலும் தண்ணீர் பிரச்னையின்றி சாகுபடி செய்து வந்தனர்.கடந்த 4 ஆண்டுகளாக போதியளவு மழை இல்லாததால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் இல்லை. இதனால் பல ஏக்கர் பரப்பளவு நிலங்கள் சாகுபடி செய்ய முடியாமல் வறண்டன. சில விவசாயிகள் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து சாகுபடி செய்கின்றனர்.இந்த ஆற்றில் தண்ணீர் அதிகமாகச் செல்லும் போது மலட்டாற்றுக்கு பிரிகிறது. மலட்டாறு கொங்கரங்கொண்டான் கிராமத்தில் துவங்கி கடலுார் மாவட்டம் ரெட்டிக்குப்பம் வரை 22 கி.மீ., செல்கிறது.அதில், திருப்பாச்சனுார் கிராமத்தில் இருந்து பில்லுார், அகரம், மோட்சகுளம், சிறுவந்தாடு, பிள்ளையார்குப்பம், பூவரசன்குப்பம் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக 14 கி.மீ., துாரம் நரியாறு பிரிந்து செல்கிறது.இந்த நரியாற்றை, கிராம பகுதிகளில் உள்ள மக்கள் பலர் ஆக்கிரமிப்பு செய்து, 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ளனர்.

இந்த ஆறு செல்லும் ஓடை வழியில் முட்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது.கிராமங்கள் வழியாகச் செல்லும் ஆற்றுப் பாதையை, விவசாயிகள் பலர் ஆக்கிரமித்து நெல், கரும்பு, வேர்க்கடலை, சவுக்கு சாகுபடி செய்துள்ளனர்.இதனால் மழைக் காலங்களில் தண்ணீர் மிகையாக ஆற்றில் சென்றாலும், தேக்கி வைத்து பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து அங்குள்ள பட்டா நில விவசாயிகள், பொதுப்பணி துறை (நீர்வளம்) அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.அதன் பேரில், பொதுப்பணித் துறை (நீர்வளம்) அதிகாரிகள், வருவாய்த் துறை மூலம் ஆற்றை அளவீடு செய்து, தற்போது அளவு கற்களை பதிக்கும் பணிகளை துவங்கியுள்ளனர்.இதையடுத்து, ஆக்கிரமிப்பில் உள்ளோருக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டு, விரைவில் அந்த இடங்கள் காலி செய்து ஆற்று நீர் செல்லும் பயன்பாட்டு வசதி பழைய மாதிரி கொண்டு வரப்படும் என பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது ஒருபுறம் உள்ள நிலையில், மலட்டாற்றை மேம்படுத்தும் பணிகளுக்காக கடந்தாண்டு அரசு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.இந்த நிதி மூலம் பூவரசன்குப்பத்தில் புதிய அணைக்கட்டு கட்டுதல், தண்ணீர் செல்லும் வழிபாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இந்த பணி தற்போது வரை துவங்கப்படாமல் உள்ளது.விரைவில் வடகிழக்குப் பருவமழை துவங்க உள்ள நிலையில், மழைநீரை ஆற்றில் சேமிக்க, நரியாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை துரிதமாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X