பொது செய்தி

தமிழ்நாடு

முகூர்த்த நாளில் நெரிசலில் சிக்கி மக்கள் அவதி கொரோனா விதிகளை பின்பற்றுவதில் அலட்சியம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் கோயில் வளாகம், பஸ் ஸ்டாண்ட், சந்தை ஆகிய இடங்களில் மக்கள் குவிகின்றனர். சுபமுகூர்த்த தினங்களில் போதிய போலீசார் இன்றி புதிய பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை, வழிமுருகன்கோயில் ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள வழிவிடு முருகன் கோயில்,
முகூர்த்த நாளில் நெரிசலில் சிக்கி மக்கள் அவதி  கொரோனா விதிகளை பின்பற்றுவதில் அலட்சியம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் கோயில் வளாகம், பஸ் ஸ்டாண்ட், சந்தை ஆகிய இடங்களில் மக்கள் குவிகின்றனர்.

சுபமுகூர்த்த தினங்களில் போதிய போலீசார் இன்றி புதிய பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை, வழிமுருகன்கோயில் ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள வழிவிடு முருகன் கோயில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரோட்டில் வணிக நிறுவனங்கள், கல்யாண மண்டபங்கள், ஓட்டல்கள் நிறைய உள்ளன.

ஒவ்வொரு சுபமுகூர்த்த நாட்களிலும் வழிவிடு முருகன்கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகியுள்ளது. நேற்று ஆவணி முதல் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, வழி விடுமுருகன் கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடந்தன. இதன்காரணமாக பக்தர்களுக்கு வழிவிடுமுருகன் கோயில் உள்ளே அனுமதியில்லாததால் ரோட்டில் திருவிழா போல மக்கள் கூட்டம் காணப்பட்டது.

ரோட்டோரத்தில் கண்டபடி இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தியினர். இதே போல மருத்துவமனை ரோட்டிலும் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தினர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள் சிரமப்பட்டனர்.சுபமுகூர்த்த நாட்களில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு தளர்வால் மாவட்டத்தில் நகர், புறநகர் சந்தை, பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்றாமல் முகக்கவசமின்றி, சமூக இடைவெளியின்றி குவிகின்றனர். ஆகையால் கொரோனா மூன்றாம் கட்ட பரவலை தடுக்க நோய் தொற்று தடுப்பு விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X