அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மக்கள் திட்டங்களுக்கு பணமில்லை; பக்கத்து மாநிலங்களில் விளம்பரம்'

Added : ஆக 20, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை:'மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தவே, அரசிடம் பணம் இல்லை என்று சொல்லும் தமிழக அரசு, எந்த அடிப்படையில், பல கோடி ரூபாய் செலவில், பிற மாநிலங்களில், முழு பக்க விளம்பரங்களை கொடுக்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.புள்ளிவிபரங்கள்அவரது அறிக்கை:கொரோனாவால் பொருளாதாரம் மிக மோசமான சரிவை கண்டுள்ள நிலையில், நிதி நெருக்கடியில் அரசு
 'மக்கள் திட்டங்களுக்கு பணமில்லை; பக்கத்து மாநிலங்களில் விளம்பரம்'

சென்னை:'மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தவே, அரசிடம் பணம் இல்லை என்று சொல்லும் தமிழக அரசு, எந்த அடிப்படையில், பல கோடி ரூபாய் செலவில், பிற மாநிலங்களில், முழு பக்க விளம்பரங்களை கொடுக்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.


புள்ளிவிபரங்கள்

அவரது அறிக்கை:கொரோனாவால் பொருளாதாரம் மிக மோசமான சரிவை கண்டுள்ள நிலையில், நிதி நெருக்கடியில் அரசு சிக்கி தவித்து வருகிறது.அதேசமயம், கடன் அளவும் உயர்ந்து வருகிறது.

தமிழக அரசின் நிதி நிலவரம் குறித்து, நிதி அமைச்சர் தியாகராஜன், புள்ளிவிபரங்களுடன் விளக்கி இருந்தார்.இதற்கு முன், தமிழகம் இவ்வளவு பெரிய பற்றாக்குறையை சந்தித்தது கிடையாது. இனி என்ன செய்து, தமிழக அரசு, எப்படி இந்த கடனை அடைக்க போகிறது என்ற கேள்விக்கு, தி.மு.க., அரசின் பட்ஜெட்டில் பதில் இல்லை.

வாக்குறுதிகளை நம்பி, மக்கள் ஏமாற்றம் அடைந்து நிற்கின்றனர். எந்த அடிப்படை வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாமல் போனதற்கு காரணம், அரசின் மோசமான நிதி நிலைமை என்று கூறும் அரசு, தங்கள் 100 நாள் சாதனைகளை விவரித்து, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களின் பத்திரிகைகளில், முழு பக்க விளம்பரங்களை பெரும் செலவில் கொடுத்துள்ளது.

மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தவே பணம் இல்லை என்று சொல்லும் தமிழக அரசு, எந்த அடிப்படையில், பல கோடி ரூபாய் செலவில், பிற மாநிலங்களில், பிற மொழிகளில் முழு பக்க விளம்பரங்களை கொடுக்கிறது?இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - chennai,இந்தியா
22-ஆக-202101:44:05 IST Report Abuse
Amal Anandan கொடநாடு கொள்ளை வழக்கிற்கு எதிராக பேசும் இவர் கூட அயோக்கியர்தான்.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
21-ஆக-202119:06:48 IST Report Abuse
Dhurvesh டெல்லியில் 1000 கோடி கணக்கில் advt செலவு செய்தான் ஒருத்தன் அவனை என்ன சொல்ல
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
21-ஆக-202110:05:12 IST Report Abuse
Narayanan No money > this is the statements of DMK government. But they had given the advertisement for their 100 days rule achievements. Is it necessary ?? When they were in opposition , blamed Edappadiyaar rule for spending money for their advertisement . At least they were done one or two pages. Now more than 8 pages in all news papers in tamilnadu and other states. Why they were not applied their mind for this unnecessary expenditure at this crises period?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X