பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு சான்றிதழ்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் பணியின் போது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.நிகழ்ச்சியில், ஆயுதப்படை பிரிவில் சப் இன்ஸ்பெக்டர் பிரகாசம், போலீசார் சத்தியமூர்த்தி, விஜயகுமார், ராஜா ஆகியோருக்கு எஸ்.பி., ஸ்ரீநாதா வெகுமதி மற்றும் பாராட்டு சான்றை வழங்கினார்.அதே போல், கெங்கராம்பாளையம்

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் பணியின் போது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.நிகழ்ச்சியில், ஆயுதப்படை பிரிவில் சப் இன்ஸ்பெக்டர் பிரகாசம், போலீசார் சத்தியமூர்த்தி, விஜயகுமார், ராஜா ஆகியோருக்கு எஸ்.பி., ஸ்ரீநாதா வெகுமதி மற்றும் பாராட்டு சான்றை வழங்கினார்.அதே போல், கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில் கார் மற்றும் 350 மதுபாட்டிலை பறிமுதல் செய்ததற்காக சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சிவானந்தம், போலீஸ்காரர்கள் ஜீவனாதன், நசீர்அலி.மயிலம் போலீஸ் நிலையத்தில், பொம்பூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே 75 மதுபாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்ததற்காக, சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், போலீசார் வெங்கடேசன், விஜயகுமார், துரைராஜ் ஆகியோருக்கு எஸ்.பி., ஸ்ரீநாதா வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X