பொது செய்தி

தமிழ்நாடு

அம்ரிதா விஸ்வ வித்யாபீடம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சென்னை:அம்ரிதா விஸ்வ வித்யாபீடம், ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புகள் குறித்த, சிறப்பு 'வெபினார்' நிகழ்ச்சி நடத்த உள்ளது.அம்ரிதா விஸ்வ வித்யாபீடம் சார்பில், ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புகள் குறித்து, இம்மாதம் 24ம் தேதி மாலை 4:00 மணிக்கு, சிறப்பு வெபினார் எனப்படும் இணையதள கருத்தரங்கு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.அதில், ஒருங்கிணைந்த பாடத் திட்டங்கள் குறித்து,

சென்னை:அம்ரிதா விஸ்வ வித்யாபீடம், ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புகள் குறித்த, சிறப்பு 'வெபினார்' நிகழ்ச்சி நடத்த உள்ளது.

அம்ரிதா விஸ்வ வித்யாபீடம் சார்பில், ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புகள் குறித்து, இம்மாதம் 24ம் தேதி மாலை 4:00 மணிக்கு, சிறப்பு வெபினார் எனப்படும் இணையதள கருத்தரங்கு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.அதில், ஒருங்கிணைந்த பாடத் திட்டங்கள் குறித்து, எம்.எஸ்சி., - கணிதம், எம்.எஸ்சி., - டேட்டா சயின்ஸ், எம்.எஸ்சி., - இயற்பியல் மற்றும் எம்.எஸ்சி., - வேதியியல் படிப்புகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், பிளஸ் 2 மாணவர்களும், பெற்றோரும் பங்கேற்று, பாடத் திட்டங்கள் குறித்த தகவல்களை இலவசமாக பெறலாம். அதில், அறிவியல் துறை தலைவர் மகாதேவன், அறிவியல் துறை பேராசிரியர் சதீஷ்பாபு, கணிதத் துறை பேராசிரியர் சோமசுந்தரம் பங்கேற்கின்றனர்.

எதிர்கால பாடத் திட்டம், எளிமையான தேர்வு முறை, வேலைவாய்ப்பு போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சியை மாணவர்கள், கல்வி நிறுவனத்தின் 'யு டியூப், பேஸ்புக்' பக்கங்களில் காணலாம். மேலும், https://bit.ly/3kfIoQ2 என்ற இணைப்பிலும் காணலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X