சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீக்குளிக்க முயன்ற விவசாயி குடும்பம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் விவசாயி, குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.மேல்மலையனுார் அடுத்த சிறுதலைப்பூண்டியைச் சேர்ந்தவர் நடராஜன், 61; விவசாயி. இவர், தனது மனைவி ராஜகுமாரி, 55; மற்றும் மகன் வெங்கடேசன், 37; ஆகியோருடன் நேற்று விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்தார்.அங்கு, அவர்கள் தங்கள் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொள்ள முயன்றபோது,

விழுப்புரம்-விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் விவசாயி, குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.மேல்மலையனுார் அடுத்த சிறுதலைப்பூண்டியைச் சேர்ந்தவர் நடராஜன், 61; விவசாயி. இவர், தனது மனைவி ராஜகுமாரி, 55; மற்றும் மகன் வெங்கடேசன், 37; ஆகியோருடன் நேற்று விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்தார்.அங்கு, அவர்கள் தங்கள் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொள்ள முயன்றபோது, போலீசார் பிடித்து விசாரித்தனர்.அதில், மேல்மலையனுாரைச் சேர்ந்த ஜெகநாதன் மகள் மோகனாவிடம் 4 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக சொத்துக்களை அடமானமாக கிரயம் செய்து கொண்டார். இது குறித்து வளத்தி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், வழக்கை வாபஸ் பெறக்கோரி எங்களை மோகனா தரப்பினர் மிரட்டுகின்றனர். எனவே, மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தனர்.இதையடுத்து, புகார் அளிக்கும்படி போலீசார் கூறியதைத் தொடர்ந்து எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டுச் சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X