கிரைம் செய்திகள்...| Dinamalar

கிரைம் செய்திகள்...

Added : ஆக 20, 2021
Share
பைக் மோதி விவசாயி பலிவானுார்: எறையூர் ஆறுமுகசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை, 52; விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு பெரும்பாக்கத்தில் இருந்து எறையூருக்கு மொபட்டில் சென்றார். எறையூரில் இருந்து பெரும்பாக்கம் நோக்கி வந்த யமஹா பைக், ஏழுமலை மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஏழுமலை ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வானுார் போலீசார்

பைக் மோதி விவசாயி பலிவானுார்: எறையூர் ஆறுமுகசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை, 52; விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு பெரும்பாக்கத்தில் இருந்து எறையூருக்கு மொபட்டில் சென்றார். எறையூரில் இருந்து பெரும்பாக்கம் நோக்கி வந்த யமஹா பைக், ஏழுமலை மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஏழுமலை ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.சிறுமி மாயம்: தாய் புகார்சங்கராபுரம்: சங்கராபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, நேற்று முன்தினம் கடைக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.வாலிபரைத் தாக்கியவர் மீது வழக்குவிழுப்புரம்: வி.மருதுாரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 21; இவர் கடந்த 19ம் தேதி சைக்கிளில் மெடிக்கலுக்கு சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த கணபதி ஓட்டி வந்த பைக் மோதியது. இதனால், ஏற்பட்ட தகராறில் சந்தோஷ்குமாரை, கணபதி திட்டி தாக்கினார். புகாரின்பேரில், கணபதி மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.மாணவியை கடத்தியவர் மீது வழக்குவிழுப்புரம்: ஆசாரங்குப்பத்தைச் சேர்ந்தவர் வீரமணி மகள் திவ்யா, 19; பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு மாணவி. நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. விசாரித்தபோது, திருச்சியைச் சேர்ந்த உறவினர் ராஜாமணி மகன் வல்லரசு, 23; என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.வாலிபரைத் தாக்கியவர் கைதுவிழுப்புரம்: ராகவன்பேட்டையைச் சேர்ந்தவர் ஆகாஷ், 22; இவர் தனது நண்பர் கிருஷ்ணன், 21; என்பவருடன், மாம்பழப்பட்டில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார். அப்போது, மாம்பழப்பட்டு புதுகாலனியை சேர்ந்த விக்னேஷ், 22; கேப்டன், கவியரசன், ஜான்பாபு, ஆகியோர் ஆகாஷிடம் தகராறில் ஈடுபட்டு, பைக் சாவியை பிடுங்கிக்கொண்டு தாக்கினர். புகாரின்பேரில், விக்னேஷ் உட்பட 4 பேர் மீது காணை போலீசார் வழக்குப் பதிந்து விக்னேைஷ கைது செய்தனர்.மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலைகள்ளக்குறிச்சி: உலகங்காத்தான் புதுக்காலனி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 33; இவரது மனைவி ராஜேஸ்வரி, 25; 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இதனால், ராஜேஸ்வரி, கணவரிடமிருந்து பிரிந்து சென்றார். இதனால், மனமுடைந்த வெங்கடேசன், நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.வழக்கறிஞரைத் தாக்கிய மூவர் மீது வழக்குதிருவெண்ணெய்நல்லுார்: சென்னை, முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் பிரகாஷ், 33; சென்னையில் வழக்கறிஞராக உள்ளார். இவர், கடந்த 18ம் தேதி திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சித்தானங்கூர் கிராமத்தில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அவரது மாமனாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது அண்ணன் முருகையன் என்பவருக்குமிடையே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.தடுக்கச் சென்ற பிரகாைஷ, முருகையன் மகன்கள் கார்த்தி, கணபதி மற்றும் தொப்புளான் மகன் அய்யனார் ஆகிய மூவரும் சேர்ந்து தாக்கினர்.இது குறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார், கார்த்தி, கணபதி, அய்யனார் ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.மின்சாரம் தாக்கி சிறுவன் பலிவிழுப்புரம்: ரஹீம் லே அவுட்டைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் மகன் தினேஷ், 12; விழுப்புரம் பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் கொடி கம்பம் நடும்பணியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.உண்டியல் காணிக்கை திருட்டுவிக்கிரவாண்டி: ஒரத்துார் கிராமத்தில் முத்தாலம்மன் கோவிலுக்கு நேற்று காலை பூசாரி செல்வராஜ் சென்றபோது, கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து, உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.கிராவல் கடத்தல்: லாரி பறிமுதல்செஞ்சி: கஞ்சனுார் சப் இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் நேற்று மாலை வேலியந்தல் கூட்ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அந்தவழியாக கிராவல் மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, லாரியை ஓட்டி வந்த உலகலாம்பூண்டியை சேர்ந்த கோபால், 32; என்பவரை கைது செய்தனர்.மகள் மாயம்: தாய் புகார்கள்ளக்குறிச்சி: மோகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது 18 வயது மகளை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தாய் உமா அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X