பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கண்டாச்சிபுரம்-கண்டாச்சிபுரத்தில் நடைபெற இருந்த சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.கண்டாச்சிபுரம் அடுத்த அடுக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் மகன் சோமசுந்தரம், 24; இவருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் நேற்று திருமணம் நடைபெற இருந்தது.இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு புகார் வந்தது. அதன் பேரில், சைல்ட் லைன் அமைப்பினர்

கண்டாச்சிபுரம்-கண்டாச்சிபுரத்தில் நடைபெற இருந்த சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.கண்டாச்சிபுரம் அடுத்த அடுக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் மகன் சோமசுந்தரம், 24; இவருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் நேற்று திருமணம் நடைபெற இருந்தது.இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு புகார் வந்தது. அதன் பேரில், சைல்ட் லைன் அமைப்பினர் நேற்று முன்தினம் இரவு, கண்டாச்சிபுரம் போலீசாரின் உதவியுடன், சிறுமியின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில் சிறுமிக்கு 15 வயது என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சிறுமி மற்றும் மணமகன் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி, திருமணத்தை தடுத்து நிறுத்தினர். சிறுமியை மீட்டு விழுப்புரம் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X