புதிதாக 97 பேருக்கு கொரோனா பாதிப்பு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதிதாக 97 பேருக்கு கொரோனா பாதிப்பு

Added : ஆக 20, 2021
Share
புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மாநிலத்தில் நேற்று முன்தினம் 5,024 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 97 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலமாக, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 773 ஆக உயர்ந்துள்ளது.மேலும், நேற்று முன்தினம், 105 பேர் குணமடைந்தனர். இதையடுத்து, தொற்றில்

புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மாநிலத்தில் நேற்று முன்தினம் 5,024 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 97 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலமாக, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 773 ஆக உயர்ந்துள்ளது.மேலும், நேற்று முன்தினம், 105 பேர் குணமடைந்தனர். இதையடுத்து, தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 4 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 179 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; வீட்டு தனிமையில் 784 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மாநிலத்தில் தொற்று பாதிப்பு 1.93 சதவீதமாக உள்ளது. இறப்பு சதவீதம் 1.47 ஆக உள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 97.74 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை இரண்டாவது தவணை உட்பட 7 லட்சத்து 76 ஆயிரத்து 319 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X