பொது செய்தி

இந்தியா

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம் முதல்வர் திறந்து வைப்பு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் மது டிரேடர்ஸின் ஏ.எம்.ஓ. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ் விற்பனை ேஷாரூமை, முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.ஏ.எம்.ஓ. மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன மின்சார வாகனத்தின் விநியோகஸ்தராக புதுச்சேரி மது டிரேடர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மெயின் ரோட்டில் புதுச்சேரி மூலக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மது டிரேடர்ஸின் திறப்பு

புதுச்சேரி-புதுச்சேரியில் மது டிரேடர்ஸின் ஏ.எம்.ஓ. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ் விற்பனை ேஷாரூமை, முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.ஏ.எம்.ஓ. மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன மின்சார வாகனத்தின் விநியோகஸ்தராக புதுச்சேரி மது டிரேடர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மெயின் ரோட்டில் புதுச்சேரி மூலக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மது டிரேடர்ஸின் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் முதல்வர் ரங்கசாமி குத்து விளக்கேற்றி வைத்து, கடையை திறந்து வைத்தார். முன்னதாக, மது டிரேடர்ஸின் உரிமையாளர் மாதவன் வரவேற்றார்.விழாவில் நிறுவன மேலாண் துணை இயக்குநர் பாலகாந்தி, டாக்டர் மணிவண்ணன், ஓய்வு பெற்ற எஸ்.பி., ராமலிங்கம், வாசவி இண்டர்நேஷனல் தலைவர் வேணுகோபால், ஓய்வுபெற்ற செயற்பொறியாளர் ரவி மற்றும் நண்பர்கள், விருந்தினர்கள் பங்கேற்றனர்.'இங்கு விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இன்ஸ்பைட்டர் மற்றும் ஜான்டி என இரண்டு மாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு மாடல்களுக்கும் லைசன்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் தேவையில்லை. மேலும், அடுத்த மாதம் முதல் பதிவு செய்யும் மாடல்களும் கிடைக்கும்.இந்த வாகனங்களை ஒரு முறை சார்ஜ் செய்தால் 70 கிலோ மீட்டர் முதல், 120 கி.மீ.,வரை பயணம் செய்யலாம். மூன்று வகையான லித்தியம் பேட்டரிகள் வசதியுடன் கிடைக்கும்.இருவாகனங்களின் முக்கிய அம்சங்களாக சைடு ஸ்டேட் சென்சார், கண்ட்ரோல் லாக் சிஸ்டம், திருட்டை தடுக்கும் எச்சரிக்கை அலாரம் , இஞ்சின் கிக் ஸ்விட்ச், எலக்ட்ரானிக் அசிஸ்டெட் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை உள்ளன' என உரிமையாளர் மாதவன் தெரிவித்தார்.

 
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X