பொது செய்தி

இந்தியா

சட்டசபையில் 'நோ சிக்னல்'

Added : ஆக 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி-சட்டசபை வளாகத்தில் மொபைல்போன் சிக்னல்களை பலப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சபாநாயகர் தலைமையில் நடந்தது.புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் மொபைல் போன்களுக்கு சரிவர சிக்னல் கிடைப்பதில்லை. இதனால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இப்பிரச்னை குறித்து அறிந்த சபாநாயகர் செல்வம், தகவல்

புதுச்சேரி-சட்டசபை வளாகத்தில் மொபைல்போன் சிக்னல்களை பலப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சபாநாயகர் தலைமையில் நடந்தது.

புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் மொபைல் போன்களுக்கு சரிவர சிக்னல் கிடைப்பதில்லை. இதனால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இப்பிரச்னை குறித்து அறிந்த சபாநாயகர் செல்வம், தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள், மொபைல் போன் நிறுவன அதிகாரிகள் மற்றும் மொபைல் போன் டவர் அமைப்பாளர்களுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் ருத்ர கவுடு, புரோகிராமர் ராஜசேகர், சபாநாயகரின் தனிச் செயலர் தயாளன் மற்றும் ஜியோ நிறுவன லியொன் ஆண்டனி, வினோத், இன்டஸ் டவர் நிறுவனத்தை சேர்ந்த செந்தில்குமார், சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மொபைல் போன் சிக்னல்களை பலப்படுத்தும் வகையில் புதிய டவர் அமைப்பது, தேவையான தொழில்நுட்ப வசதிகளை உடனடியாக செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X