மோட்டாம்பட்டி - கூடலுார் ஆற்றில் பாலம்: மலைவாழ் கிராம மக்கள் கோரிக்கை| Dinamalar

மோட்டாம்பட்டி - கூடலுார் ஆற்றில் பாலம்: மலைவாழ் கிராம மக்கள் கோரிக்கை

Added : ஆக 21, 2021
Share
சங்கராபுரம்-சங்கராபுரம் அருகே ஆற்றில் பாலம் கட்டப்படாததால் மழைக் காலங்களில் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் மலைவாழ் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலையைச் சேர்ந்த மோட்டாம்பட்டி, கூடலுார் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இவர்கள், அத்தியாவசிய தேவைக்கு பொருட்கள் வாங்க பக்கத்து கிராமமான

சங்கராபுரம்-சங்கராபுரம் அருகே ஆற்றில் பாலம் கட்டப்படாததால் மழைக் காலங்களில் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் மலைவாழ் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்

.சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலையைச் சேர்ந்த மோட்டாம்பட்டி, கூடலுார் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இவர்கள், அத்தியாவசிய தேவைக்கு பொருட்கள் வாங்க பக்கத்து கிராமமான மோட்டாம்பட்டிக்கு குறுக்கே செல்லும் ஆற்றை கடந்து செல்ல வேண்டும்.மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் போதும், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.கடந்த ஆண்டு மோட்டாம்பட்டியில் சொசைட்டிக்கு பால் ஊற்றச் சென்ற கூடலுார் கிராம விவசாயி ஆற்றைக் கடந்த போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 4 நாட்களுக்குப் பின் அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களும் மழைகாலங்களில் தண்ணீர் ஓடினால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.அப்பகுதி மலை வாழ் மக்கள், மோட்டாம்பட்டி - கூடலுார் ஆற்றில் பாலம் கட்டக்கோரி பல ஆண்டுகளாக அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, மோட்டாம்பட்டி - கூடலுார் ஆற்றில் பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X