மாவட்டந்தோறும் விற்பனை பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டந்தோறும் விற்பனை பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம்கள்

Added : ஆக 21, 2021
Share
சென்னை:வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி அறிக்கை:வீட்டுவசதி வாரியத்தில், வீடு, மனைகள், கடைகளுக்கான ஒதுக்கீடு பெற்று, தவணை செலுத்தி முடித்தவர்கள், விற்பனை பத்திரம் பெறாமல் இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்தது. கூட்டங்களில் அறிவுறுத்தியதன் அடிப்படையில், 1,021 பேருக்கு விற்பனை பத்திரங்கள் வழங்கப்பட்டன.இந்த பணிகளை வேகப்படுத்த, மாவட்டந்தோறும் விற்பனை பத்திரம் வழங்கும்

சென்னை:வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி அறிக்கை:வீட்டுவசதி வாரியத்தில், வீடு, மனைகள், கடைகளுக்கான ஒதுக்கீடு பெற்று, தவணை செலுத்தி முடித்தவர்கள், விற்பனை பத்திரம் பெறாமல் இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்தது.

கூட்டங்களில் அறிவுறுத்தியதன் அடிப்படையில், 1,021 பேருக்கு விற்பனை பத்திரங்கள் வழங்கப்பட்டன.இந்த பணிகளை வேகப்படுத்த, மாவட்டந்தோறும் விற்பனை பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதன்படி, மாவட்டங்களில் உள்ள வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களில், 24, 25, 26ம் தேதிகளில் முகாம்கள் நடத்தப்படும்.காலை 10:00 முதல், மதியம் 1:30 மணி வரை, முகாம்கள் நடக்கும். இந்த முகாம் குறித்த கூடுதல் விபரங்கள் அறிய, அலுவலக நேரங்களில் தொடர்புகொள்ள வேண்டிய இலவச தொலைபேசி எண்கள்: 1800 599 6060, 1800 599 01234. syanlt.tnhb@tn.gov.in என்ற, 'இ - மெயில்' முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X