பொது செய்தி

தமிழ்நாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதி சிவன் கோவில்களில் ஆவணி வெள்ளி வளர்பிறை சிறப்பு பிரதோஷ வழிபாடு நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதேபோல் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், நீலமங்கலம், கமலா நேரு தெரு ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர், சோமண்டார்குடி

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதி சிவன் கோவில்களில் ஆவணி வெள்ளி வளர்பிறை சிறப்பு பிரதோஷ வழிபாடு நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதேபோல் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், நீலமங்கலம், கமலா நேரு தெரு ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர்.முடியனுார், தென்கீரனூர் அருணாசலேஸ்வரர், தண்டலை சுயம்பு நாதேஸ்வரர், கனங்கூர் ராமநாதீஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர், வடக்கநந்தல் உமாமகேஸ்வரர்.ஆலத்துார் திருவாலீஸ்வரர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு தேவாரம், திருவாசகம் பாடி நடந்தது.சின்னசேலம்தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரம், நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தி மகா தீபாராதனை நடந்தது.இதேபோன்று, கங்காதீஸ்வரர், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர், கூகையூர் பெரியநாயகி உடனுறை சொர்ணபுரீஸ்வரர் கோவில்களிலும் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X