பொது செய்தி

தமிழ்நாடு

கோரிக்கை: மானிய விலையில் கரும்பு அறுவடை இயந்திரம் வழங்க...ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வுக்கு தீர்வு காணப்படுமா?

Added : ஆக 21, 2021
Share
Advertisement
தியாகதுருகம்-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரும்பு அறுவடை செய்ய ஆட்கள் பற்றாக்குறை மற்றும் கூலி உயர்வு பிரச்னைக்குத் தீர்வு காண கரும்பு அறுவடை இயந்திரத்தை மானிய விலையில் அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்வதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. இங்கு 3 கூட்டுறவு ஆலை, 2 தனியார் ஆலை என மொத்தம் 5

தியாகதுருகம்-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரும்பு அறுவடை செய்ய ஆட்கள் பற்றாக்குறை மற்றும் கூலி உயர்வு பிரச்னைக்குத் தீர்வு காண கரும்பு அறுவடை இயந்திரத்தை மானிய விலையில் அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்வதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. இங்கு 3 கூட்டுறவு ஆலை, 2 தனியார் ஆலை என மொத்தம் 5 சர்க்கரை ஆலைகள் உள்ளன.கரும்பு அறுவடை செய்வதில் பல நடைமுறை சிக்கல்களை விவசாயிகள் சந்திக்க நேரிடுகிறது. ஆலையிலிருந்து கட்டிங் ஆர்டர் பெற்றவுடன் கரும்பு அறுவடை மேற்கொள்ள போதிய கூலி ஆட்கள் கிடைப்பதில்லை.அப்படியே வந்தாலும், கூலியும் உயர்ந்து கொண்டே போகிறது. வேறொரு வயலில் கரும்பு அறுவடை செய்யும் போதே அட்வான்ஸ் வாங்கிக் கொள்ளும் அவர்கள் அதனை வெட்டி அறுவடை செய்த பின்னரே அடுத்த வயலுக்குச் செல்கின்றனர். அதுவரை விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.அதேபோல் ஆட்களைக் கொண்டு அறுவடை செய்யும் கரும்பை வாகனங்களில் ஏற்றி அனுப்பும்போது வழியில் சரிந்து விபத்து ஏற்பட காரணமாக உள்ளது.இப்பிரச்னைகளுக்கு கரும்பு அறுவடை இயந்திரத்தை பயன்படுத்துவது ஒன்றே நிரந்தரத் தீர்வாக அமையும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.கூலியாட்களை பயன்படுத்துவதைவிட இயந்திரத்தை பயன்படுத்துவதில் வாடகை குறைவாகும். இதன் மூலம் பணத்தை பெருமளவு மிச்சப்படுத்த முடியும்.கரும்பு வயலுக்குள் செல்லும் இயந்திரம் கரும்பிலிருந்து சோகை மற்றும் சருகுகளை உரித்து, துண்டு துண்டாக வெட்டி வாகனத்தில் விழுகிறது.

கரும்பு சோகைகளை துாளாகி நிலத்திற்கு உரமாகி விடுகிறது. இவ்வாறு வெட்டப்பட்ட கரும்பு துண்டுகளை டிராக்டரில் கீழே சரியாமல் ஆலைகளுக்கு எளிதில் கொண்டு செல்ல முடியும்.கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 20 பேர் இணைந்து ஒரு நாளைக்கு 22 டன் கரும்பு வெட்டுகின்றனர். ஆனால் நவீன இயந்திரம் மூலம் தினமும் 150 டன் கரும்பு அறுவடை செய்ய முடியும்.ஆட்கள் மூலம் கரும்பு வெட்டினால் டன்னுக்கு 700 முதல் 900 ரூபாய் வரை கூலி வழங்க வேண்டியுள்ளது. ஆனால், இயந்திரத்தின் மூலம் கரும்பு வெட்ட ஒரு டன்னுக்கு 600 ரூபாய் செலவாகிறது. இதனால் அறுவடை செலவு குறைந்து கரும்பு சாகுபடியில் கூடுதல் லாபம் ஈட்ட முடியும்.இதில் உள்ள ஒரே சிக்கல் கரும்பு அறுவடை இயந்திரத்தின் விலை ஆகும். கரும்பு அறுவடை இயந்திரம் 1.30 கோடி ரூபாய் ஆகும்.

அதனால், இயந்திரத்தை வசதி படைத்தவர்கள் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலை உள்ளது. தனியார் ஆலைகள் ஒருசில இயந்திரங்களை அவர்களிடம் கரும்பு பதிவு செய்த விவசாயிகளுக்கு அறுவடைக்காக அனுப்பி வைக்கின்றன.மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள கரும்புகளை அறுவடை செய்வதற்கு தேவையான போதிய இயந்திரங்கள் புழக்கத்தில் இல்லை.இதற்குத் தீர்வாக மாவட்டத்தில் குறைந்தது 100 கரும்பு அறுவடை இயந்திரங்களை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X